Advertisement

Responsive Advertisement

வாழ்க்கை எனும் நாடகம்


Drama


ஒரு ஊரில் கண்ணன் என்ற ஒரு இளைஞன் இருந்தான். அவன் குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த குடும்பம்.         

கண்ணனுக்கு வாழ்வில் எப்பொழுதும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும் அது என்னவென்று அவனுக்கே தெரியாது.

கண்ணனும் அதைப்பற்றி பெரிதும் நினைக்காமல் தன் வாழ்க்கையை கழித்து வந்தான்.

கண்ணன் தன்னுடைய மேல்நிலை வகுப்பு முடித்துவிட்டு ஒரு கல்லூரியில் சேர விரும்பினான், அந்த கல்லூரியில் அவனுக்கு அனேக நண்பர்கள் இருக்க வேண்டும் என விரும்பினான் தனது வாழ்க்கை அங்கிருந்தாவது சந்தோசமாக இருக்குவேண்டும் என எண்ணினான்.

 ஏனெனில்,  அவன் பள்ளிப் பருவத்தில் எந்த ஒரு சந்தோஷத்தையும் பெரிதாக அனுபவித்ததில்லை அவனுக்கு  நண்பர்கள் கூட்டம் மிகக் குறைவு அதனாலே அவன் எந்த பெண்ணிடமும் சகோதரத்துவத்துடனும் மற்றும் காதல் வயத்துடனும் பழகவில்லை இதனால் அவனுக்கு காதல் ஏக்கம் அதிகமாக இருந்தது.

கண்ணனுக்கு கூச்ச சுபாவம் அதிகம் (introvert person) எப்பொழுதும் அமைதியை விரும்பும் நபர் ஆகவே இருந்து வந்தான். அதனாலேயே, எப்பொழுதும் அதிக நேரம் , தனிமையிலே இருந்தான்.

கண்ணன் கல்லூரியில் சேர்ந்தான் ஆனால், அவன் நினைத்த சந்தோசத்தை அங்கு பெற முடியவில்லை ஏனெனில், அவனது தனிமையும், அமைதியும் அதற்கு இடையூறாக இருந்தது. 

அதை அவன் பெரும் பொருட்டாக மதிக்காமல் தன்னுடைய வாழ்வின் இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

கண்ணனுக்கு வாழ்வில்  பணக்காரனாக வேண்டும் என்ற ஒரு லட்சியம்  சிறுவயதிலிருந்து இருந்து வந்தது.  அதற்காக நன்றாக படித்து நல்ல வேளையில் சேர வேண்டுமென்று நினைத்தான்.

ஆனால், அவனுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களாளும், சூழ்நிலைகளாலும் சரியாக கல்வி கற்க முடியவில்லை.

தன்னால் சரியான‌ பாதையை தேர்ந்தெடுக்க முடியாததாலும், படிப்பறிவு குறைவாக இருந்ததினாலும், தான் ஆசைப்பட்டதை நிறைவேற்றமுடியவில்லை என்று நினைத்து வேதனையுற்றான்.

இதனால், மனச்சோர்வுற்று தான் எப்போதும் தனிமையில் இருக்க விரும்பும் ஒரு மரத்தடிக்கு தனியாக நடந்து சென்றான்.   

அப்பொழுது, அந்த மரத்தடியில் கிழிந்த ஆடையுடன்  ஒரு வயதானவர் பறவைகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அதை நான் அவருக்கு தெரியாமல் கேட்டேன்.

அவர், அந்த பறவைகளிடம் நாடக பாத்திரங்களே இன்னும் சில நாட்களில் உங்களது இந்த பாத்திரம்  முடிய உள்ளது வேறு பாத்திரத்துக்கு செல்ல தயாராக இருங்கள் என்றார்.

நான் மரத்திற்கு பின்புறம் நின்று அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்ததை அவர் கண்டு  கண்ணா! என் முன்னாடி வா என்றார் எனக்கு என் பெயர் எவ்வாறு அவருக்கு தெரியும் என்று ஆச்சரியத்துடன் அவர் முன்னே சென்று நின்றேன்.




கண்ணன் :

     பெரியவரே என் பெயர் எவ்வாறு உங்களுக்கு தெரியும்.

துறவி : 

   எனக்கு உன் பெயர் மட்டுமல்ல நீ யார் உன் குடும்பம் யார் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் இனி நீ என்ன செய்யப் போகிறாய் என்பது பற்றி அனைத்தும் எனக்கு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌தெரியும்.

கண்ணன் :

  அது எவ்வாறு என்னைப் பற்றின அனைத்து தகவல்களும் உங்களுக்கு தெரியும் என்கிறீர்கள்அது எப்படி உங்களுக்கு தெரிந்திருக்க முடியும்.எங்கே என்னை பற்றி ஏதாவது சொல்லுங்கள் பார்ப்போம்.

துறவி : 

  நீ உன் குடும்பத்திற்கு ஒரே மகன், உன் குடும்பத்தில் நீ, உன் தந்தை, தாய் ஆகிய மூவரும் உள்ளீர்கள். நீ உனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினபடி இங்கு வந்துள்ளாய், சரியா?

கண்ணன் : 

  அது எவ்வாறு பெரியவரே என்னைப் பற்றின முழுவிபரமும் உங்களுக்கு தெரியும் இப்படி இருக்க வாய்ப்பே இல்லையே! நீங்கள் யார் இங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

துறவி :

  கண்ணா! குழம்பாதே இங்கு நடக்கும் ஒவ்வொரு காரியங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். இவற்றை பற்றி  பின்னாடி உனக்கே தெரியவரும் குழம்பாதே அதுவரை நீ காத்திருக்க வேண்டும் கண்ணா.

கண்ணன் : 

 உங்கள் பெயர் என்ன?  நான் இங்க வந்த உடனே நீங்கள் பறவையிடம் என்ன கூறிக்கொண்டிருந்தீர்கள். ஏதோ நாடகம், பாத்திரம் என்று கூறிக் கொண்டிருந்தீர்களே அப்படி என்றால் என்ன? 

துறவி :

 எனக்கென்று பெயர் எதுவும் இல்லை, என்னை அனைவரும் கிழவனே அல்லது பைத்தியக்காரனே  அல்லது பிச்சைக்காரர்கனே என தான் அழைப்பார்கள். 

கண்ணா! நாம் அனைவரும் இங்கு நடிக்கவே வந்துள்ளோம். நாம் வெறும் பாத்திரங்கள் மட்டுமே அதைத்தான் பறவைகளுக்கு கூறிக் கொண்டு இருந்தேன் கண்ணா!.

கண்ணன் :

  நீங்கள் கூறுவது எனக்கு விளங்கவில்லையே பெரியவரே நாம் அனைவரும் பாத்திரமா! நடிக்க வந்தோமா! நீங்கள் ஏதோ உளறுவது போல் தெரிகிறதே. நாம் உண்மை பாருங்கள் நாம் இருவரும் உரையாடிக் கொண்டு உள்ளோம், நான் நடக்கின்றேன் நான் பேசுகிறேன் நான் உணவு  உட்கொள்கிறேன்.நாம் அனைத்து சந்தோசங்களையும் அனுபவிக்கவே பூமியில் பிறந்துள்ளோம் இவ்வாறு இருக்கையில் நாம் எவ்வாறு பாத்திரமாவோம் பெரியவரே.

துறவி :

  கண்ணா அப்பொழுது நாம் ஏன் மரணிக்கிறோம். நீ கூறுவது போல் அனைத்து சந்தோஷங்களையும் அனுபவிப்பதற்காகவே நாம் இங்கு பிறந்துள்ளோம் என்றால் எதற்காக நமக்கு துன்பம், கவலை, இறப்பு, இழப்பு, நோய், பிரிவு, உறவு, நண்பன், பகைவன்,மனக்குறை, உடற்குறை,பசி, உழைப்பு, உறக்கம், ஏற்றத்தாழ்வு, வஞ்சகம், போட்டி, பொறாமை, நல்லது, கெட்டது போன்ற அனைத்தும் எதற்காக நமக்கு ஏற்ப்படுகிறது. 

கண்ணன் :

 இவையெல்லாம் இருந்தால் தானே மனித வாழ்க்கையானது முழுமை யடைகிறது  இவை எதுவும் இல்லாவிட்டால் மனித வாழ்க்கை எவ்வாறு முழுமையடையும்  பெரியவரே.

துறவி :

 கண்ணா இவற்றால் மனித வாழ்க்கை முழுமை அடைவதில்லை, இவற்றால் தான் மனித வாழ்க்கை முழுமையடையாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

கண்ணன் : 

 நீங்கள் கூறுவது எனக்கு விளங்கவில்லையே பெரியவரே.

துறவி :

 கண்ணா மனிதன் சந்தோசத்திற்காக மட்டுமே பூமியில் பிறப்பதில்லை அப்படி பிறந்திருந்தால் அனைவரும் சமமாக தானே பிறந்திருக்க வேண்டும் ஏன் ஒருவன் குருடனாக இருக்கிறாரன், ஏன் ஒருவனுக்கு கண் நன்றாக தெரிகிறது ஏன் ஒருவன் பணக்காரனாக இருக்கிறான், ஏன் ஒருவன் ஏழையாக இருக்கிறான், ஏன் ஒருவன் நூறு வயது வரை வாழ்ந்து அனைத்து சந்தோஷத்தையும் அனுபவித்து இறக்கின்றான், இன்னொருவனோ இருபது வயது வரை  மட்டுமே வாழ்ந்து எந்த ஒரு சந்தோசத்தையும் அனுபவிக்காமல் இறந்து விடுகின்றான்.

 துறவி :

  அப்படியே நீ கஷ்டப்பட்டு அனைத்து சந்தோசங்களையும் உன்னுடையதாக்கிக்கொண்டாலும் நீ அவற்றை முழுவதுமாக அனுபவித்துக்கொள்வதற்குள் மரணம் உன்னை நெருங்கி விடும். நீ உன் ஆயுட்காலம் முழுவதும் சம்பாதித்த சொத்து, மனைவி, மக்கள், மனை, பேறு, புகழ், அனைத்தும் ஒரு நொடிப்பொழுது கனவாக மாறி உன்னை மண் குழிக்குள் தள்ளி மண் மேட்டில் ஏறி நிற்கும்.

எதற்காக பிறந்தோம் எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு சொத்துக்களை சேர்த்தோம்  இவ்வளவு சந்தோசங்கள் அனைத்தும் வெறும் கனவாக மாறி இந்த மண் குழிக்குள் செல்வதற்க்கா என்று உன்னை நீயே கேட்டுக்கொள் கண்ணா.

கண்ணன் :

 பிறகு நாம் எதற்காக தான் பிறந்தோம் எதற்காக இவ்வளவு உணர்ச்சிகள்.  நம் கண்முன்னே இருக்கும் இத்தனை சந்தோசங்களையும் நாம் அள்ளி பருக கூடாதா பிறகு இதெல்லாம் எதற்காக நமக்குத் தரப்பட்டு உள்ளன. இத்தனை சந்தோசங்களையும் இத்தனை துன்பங்களையும் நான் யாரிடமும் கேட்கவில்லை நான் ஏன் இவற்றை எல்லாம் அனுபவிக்க வேண்டும். நான் ஏன் பிறக்க வேண்டும் நான் ஏன் இறக்க வேண்டும் இதெல்லாம் எதற்காக நடக்கிறது  இதற்கெல்லாம் பின்னால் என்ன தான் உள்ளது பெரியவரே.

துறவி :

 கூறுகிறேன் கண்ணா, இதற்கெல்லாம் பின்னால் ஒன்றே ஒன்று உள்ளது கண்ணா. அதுவே அனைத்தும், அதுவே பிறப்பும் ஆகும், அதுவே இறப்பும் ஆகும்,அதுவே அனைத்து இன்பம், துன்பம், நல்லது, கெட்டது அனைத்தும் அதுவே, அதுவே அன்பு, அதுவே தொடக்கம், அதுவே முடிவு.

கண்ணன் : 

 அதுவே அனைத்துக்கும் காரணம் என்றால் அது என்ன பெரியவரே?

துறவி :

 அதுவே இறைவன் ஆகும் கண்ணா அவன் நடத்தும் நாடகமே இவை அனைத்தும்.  அதை உணர்ந்தவன் அவனோடு இருந்து அந்த நாடகத்தை காண்கின்றான்,  உணராதவன் அந்நாடகத்தின் பாத்திரமாகவே தன்னை   மாற்றிக்கொண்டு நாடகமே உண்மை, இப்பாத்திரமே உண்மை என்று அவற்றின் பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம், ஆசை, காமம், மது, மண், பொன்,  மாயைகளுக்கு ஆளாகி நாடகத்திலேயே உழன்று கொண்டிருப்பான். உணர்ந்தவன் உண்மையானவனோடு உண்மையானவனாய் இருப்பான். உணராதவன் வெரும் பாத்திரமாகவே இருப்பான்.  அவனது பாத்திரங்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும் அது அவனது பாவ, புண்ணியங்களை பொறுத்து அவன் எப்போது பிறக்க வேண்டும்,  எப்போது இறக்க வேண்டும்  எந்த பாத்திரமாக பிறக்க வேண்டும்,  என்னென்ன துன்பங்களையும், இன்பங்களையும் அவன் அனுபவிக்க வேண்டும் என்பதனைப் பற்றிய அனைத்தையும் அவனே தீர்மானிக்கின்றான். இங்கு அரசனும் ஆண்டியாவான் ஆண்டியும் அரசனாவான், புலியும் மானாகும், மானும் புலியாகும். 

கண்ணன் : 

  பெரியவரே நீங்கள் கூறுவது வியப்பாக இருந்தாலும் நம்பகத்தன்மையற்றதாக உள்ளதே,  இறைவன் உள்ளாரா? நான் அவரை பார்த்ததே இல்லையே.இங்கு அதிக பணம் யார் வைத்துள்ளானோ அவனே பெரியவன் யாரிடம் பணம் இல்லையோ அவனே சிறியவன்.  நீங்கள்   கூறுவது போல் இறைவன்‌ தான் அனைத்தையும்  நடத்துகிறார் என்றால் இதனால் அவர்க்கு என்ன லாபம் நம்மை எதற்காக இவ்வாறு படைத்து அவர் சந்தோஷத்திற்காக நம் வாழ்க்கை உடன் விளையாடிக்கொண்டிருக்கிறார். நம்மை அவர் படைத்தார் என்றால் அவரை யார் படைத்தது?. கூறுங்கள் பெரியவரே?.

துறவி :

  கண்ணா இறைவன் அனைவருக்குள்ளும்மே இருக்கின்றான் இறைவன் இல்லையேல் நீ இல்லை நான் இல்லை  இந்த பூமி, பிரபஞ்சம் எதுவும் இல்லை, நாம்தான் இறைவனைக் காண முயல்வது இல்லை. 

இந்த வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொள்ளவும் முயல்வதில்லை.

இறைவனே இந்த மிகப்பெரிய நாடகத்தை உருவாக்கினார் இந்த நாடகத்தில் இருக்கும் அனைத்துக்குள்ளும்‌ இறைவன் இருக்கிறான் ஆனால்,அனைத்துக்கும் உரிய சுதந்திரத்தை அவர் வழங்கியுள்ளார். அனைவரும் அன்பு‌, கருனை, உண்மை, நேர்மை, தர்மம், ஞானம் போன்றவற்றை அவர்களாகவே அறிந்து, உணர்ந்து,

இந்த உடல் அழிந்து போனால் இந்த உயிர் எங்கே செல்கிறது  என்கின்ற மெய்ஞானத்தை(இறைவன்) அவர்களாகவே தெரிந்துகொள்ள வேண்டுமென்றே துன்பம், தீது, போதை, மயக்கம், பசி, காமம், வேதனை  முதலியன இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளன.

இங்கு பகலை உணர வேண்டுமெனில் இரவானது நிச்சயம் இருந்தாகவேண்டும் அதுபோல நல்லதை உணர வேண்டுமெனில் தீயது இருக்கத்தான் வேண்டும். இந்த தீய குணத்தை அளித்து நல்ல குணத்தை நிறுத்தி மாயை என்னும் நாடகத்தை உணர்ந்து, அன்பு என்னும் விதையை மனதிற்குள் விதைத்து.

 அந்த  விதையை நன் மரமாக வளர்த்து அம்மரத்தில் விளையும் தர்மம் என்னும் கனிகளைப் பறித்து அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

அதேபோல், கண்ணா இறைவனை யாரும் உருவாக்கவில்லை, அனைத்திற்கும் ஒரு தொடக்கம் வேண்டும்  அதுவே இறைவன் கண்ணா. 

சரி உன்னிடம் நான் சில கேள்விகளை கேட்கிறேன் நீ அதற்கு சரியான பதில் சொல்ல வேண்டும் கண்ணா.

கண்ணன் :

 சரி பெரியவரே கேளுங்கள்.

துறவி :

 கண்ணா ஆயிரம் என்ற எண்ணின் தொடக்கம் எது?

கண்ணன் :

  இதில் என்ன சந்தேகம் ஒன்று தான் பெரியவரே.

துறவி :

 இல்லை கண்ணா ஆயிரம் என்ற எண்ணின் தொடக்கம் பூஜ்ஜியம் ஆகும்.

ஆம் கண்ணா அனைத்து எண்ணின் தொடக்கமும் பூஜ்ஜியம் ஆகும்.

இந்தப் பூஜ்ஜியத்திற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது ஆனால், அதே இந்த பூஜ்ஜியத்திற்கு இருக்கும் மதிப்பை காட்டிலும் வேறு எந்த ஒரு எண்ணிற்கும் அதன் மதிப்பு கிடைக்காது. 

கண்ணன் :

 புரியவில்லையே பெரியவரே?

துறவி : 

 ஆம் கண்ணா இங்கு ஆயிரம் என்ற எண்ணின் மதிப்பானது அந்த ஆயிரத்துடனே முடிந்து விடுகிறது, அதேபோல் லட்சம் என்ற எண்ணின் மதிப்பானது  அந்த லட்சத்துடனே முடிந்து விடுகிறது.

 ஆனால் பூஜ்ஜியம் என்ற எண் ஆனது ஆயிரத்தையும் உட்கொள்ளும், லட்சத்தையும் உட்கொள்ளும், கோடியையும் உட்கொள்ளும், முடிவில்லாத எண்களையும் உட்கொள்ளும் அத்தனை மதிப்பும் இந்த பூஜ்ஜியத்திற்கே சேரும்.

ஆயிரம் என்ற எண் இல்லாமல் இருந்தால் அந்த ஆயிரம் என்ற எண்ணின் மதிப்பானது பூஜ்ஜியத்திற்கு  இல்லாமல் போய்விடுகிறது.

அதேபோல் தான் எந்த எண்ணும் இல்லாவிட்டால் பூஜ்ஜியம் மதிப்பிழந்து போய் விடுகிறது‌.

கண்ணா! இறைவனும் பூஜ்ஜியம் போன்றவன் தான் அவனிலிருந்தே அனைத்தும் தொடங்கியது அவனுள்ளேயே அனைத்தும் முடிகிறது.

இப்பிரபஞ்சத்தில் மனிதனால் என்ன கூட முடியாத அளவிற்கு அசையும் மற்றும் அசையா தன்மையுடைய உயிரினங்கள் உள்ளன. 

அந்த எண் ஆனது தொடர்ந்து கொண்டே செல்லும் அந்த எண்ணின் முடிவிலும் இறைவனே இருப்பான் அந்த எண்ணின் தொடக்கத்திலும் இறைவனே இருப்பான்.

 எவ்வாறு எண்ணிக்கை இல்லையெனில் பூஜ்ஜியத்திற்கு மதிப்பிருக்காதோ,

அதேபோல் படைப்பு இல்லையெனில் இறைவனுக்கும் மதிப்பிருக்காது.

அதாவது  இப்பிரபஞ்சத்தில் உயிரினங்கள் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே செல்லும்,  அதேபோல் இப்பிரபஞ்சமும்‌‌‌ நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே இருக்கும்.

 எப்பொழுது இப்பிரபஞ்ச விரிவடைப்பு நின்று சுருங்க ஆரம்பிக்கிறதோ  அப்போது இப்பிரபஞ்சம் முழுதும் அழிய ஆரம்பிக்கும்.

 அப்பொழுது இப்பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து உயிர்களும் அழிந்து எங்கிருந்து அவைகள் தொடங்கியதோ அங்கேயே முடியும் அதாவது பிரபஞ்சம் முழுதும் இறைவனுக்குள்ளே அடங்க ஆரம்பிக்கும்.

பிரபஞ்சம் முழுதும் அழிந்தாலும்  பூஜ்ஜியமாக இருக்கும்  இறைவன் என்றும் அழியாமல் நிலையாக இருப்பார்.

 மீண்டும் இறைவனில் இருந்து பிரபஞ்ச வெடிப்பு ஏற்படும் அப்பொழுது முதல் உயிரினம் ஆனது மீண்டும் இறைவனிலிருந்து தோன்ற ஆரம்பிக்கும்.

 இவ்வாறாக இறைவன் தன் எண்ணத்தின் மூலமாக பழையனவற்றை அழித்து புதிய பிரபஞ்சத்தையும், உயிரினங்களையும்  தன்னிலிருந்து தோற்றுவிப்பார்.

ஒவ்வொரு பிரபஞ்சத்தின் கால அளவையும் அந்த பிரபஞ்சம் எப்போது தனக்குள் அடங்க வேண்டும் எப்பொழுது புதிய பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பனவற்றை இறைவனே முடிவு செய்வார்.

கண்ணா நாம் காண்கின்ற இவையனைத்தும் இறைவனின் ஒரு எண்ணம்தானே தவிர வேறு எதுவும் இல்லை கண்ணா.

கண்ணன் :

 பெரியவரே நீங்கள் கூறுவதை கேட்க கேட்க என் மனதில் மிகப் பெரும் அதிசயத்தையும், பிரமிப்பையும் கண்டது போல் தோன்றுகிறது.

ஆனால் நீங்கள் கூறுவதை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்வது,

இவை அனைத்தும் மாயை என்றால் அப்பொழுது நாம் எந்த வித சந்தோஷத்தையும் அனுபவிக்க கூடாதா, இந்த மண், பெண், பொன் எதையும் நாம் அனுபவிக்கக்கூடாதென்றால் இவற்றையெல்லாம் என்ன செய்வது?.

துறவி :

 கண்ணா காண்பது கானல் நீர் என தெரிந்தும் அதை அள்ளிப்பருக நினைக்கிறாயே.

கண்ணன் :

 காண்பது கானல்நீர் ஆயினும் இவையனைத்தும் இப்பொழுது  தேவைப்படுகிறதே பெரியவரே.

என் பெற்றோர்களுக்கு உணவு, உடை, தங்க இடம் போன்றவைகளை நான் தான் செய்தாக வேண்டும் இதற்கெல்லாம் பணம் தேவைப்படுகிறது. அப்பொழுது இந்த பணத்தை சம்பாதிக்க நான் உழைத்து தான் ஆகவேண்டும் அவ்வாறு இருக்கையில் இந்த மாயையை நான் எவ்வாறு எதிர்கொள்ள முடியும்.

துறவி :

 கண்ணா இங்கிருக்கும் மரங்கள், பறவைகள் அனைத்தையும் பார் இக்காட்சிகள் அனைத்தும் காலந்தோறும் நிலைத்திருக்க போவது  இல்லை இவை இறைவனால் உருவாக்கப்பட்ட வெரும் எண்ணமே ஆகும்.

அதேபோல் தான் உன் பெற்றோர்களும்  காலந்தோறும் அவர்கள் உன்னுடன் இருக்கப் போவதில்லை அதற்குள் காலன் அவர்களை பற்றிக் கொள்வான்.

இவ்வளவு ஏன் உன் உறவினர்கள், நண்பர்கள், உன் மனைவி,குழந்தைகள் முதற்கொண்டு யாவரும் உன்னுடன் இறுதிவரை பயணிக்க போவதில்லை.

உன்னுடல் கூட மண் குழி வரை மட்டுமே வரும் கண்ணா.

கண்ணன் :

அப்படி என்றால் நான் எந்த ஒரு சந்தோஷத்தையும்  என் பெற்றோர்களுக்கு வழங்காமல் துன்பத்தை வழங்க வேண்டுமா பெரியவரே இது எவ்வாறு நியாயமாகும்.

துறவி :

 நான் அவ்வாறு கூறவில்லை கண்ணா.

இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு மனிதரும் உண்மையை முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும் என்றே நான் கூறுகின்றேன்.

இங்கு வாழ்கின்ற அனைவரும் தன் குடும்பமே நிரந்தரம் தன் மனைவி, மக்களே நிரந்தரம் என்று எண்ணி அவர்களின் சுகத்திற்காக தன் வாழ்நாளையே அர்பணிக்கிறார்கள்.

இனனும் சில மனிதர்கள் போதைக்கு அடிமையாகி தன் பெற்றோர்களையும், மனைவி, மக்கள்களையும்  துன்பத்தில் ஆழ்த்தி தன் சுகத்திற்காக மட்டுமே தன்னை சார்ந்துள்ளவர்களின் சுகத்தைப்பறிக்கிறார்கள்.

இவ்வாறு மனிதன் தன் வாழ்க்கையை தன் குடும்பத்திற்க்காகவும் அல்லது தன் சுகத்திற்கும் இன்னும் சில மனிதர்கள் எந்த ஒரு பொதுநலமும்,  அன்பும் இல்லாமல் முழு மிருகமாகவே நடந்து கொள்கின்றன.

இவ்வாறு மனிதன் தான் யார் என்பதை அறியாமல் தன் உடலின் அம்சத்தையும் அறியாமல்  அற்ப சுகத்திற்கு அடிமையாகி மண்ணோடு மண்ணாகி விடுகிறான்.

கண்ணா நீ உன் பெற்றோர்களுக்கும், மனைவி, பிள்ளைகளுக்கும் மூன்று வேளை உணவும் தங்க இடமும் உடுத்த உடையும் தர முயற்சி செய்யலாம் ஆனால் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையை தர உன் வாழ்க்கையை அர்ப்பணிப்பது எவ்வாறு நியாயமாகும்.

மரணமானது மனிதனை நெருங்கும் போது அவனிடம் பயத்தை தவிர வேறு ஒன்றும் இருக்காது கண்ணா.

கண்ணன் :

 நீங்கள் கூறுவது சரியே பெரியவரே நான் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு மிகப் பெரிய பணக்காரனாக முயற்சி செய்கிறேன்.

 நான் பணக்காரன் ஆகிறேனா? (அல்லது) இல்லையா? என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது.

 நான் கஷ்டப்பட்டு அவ்வளவு பணம் சேர்த்த பிறகு மரணம் என்னை ஆட்கொண்டு விட்டால் என்னுடைய உழைப்பு அனைத்தும் வீணாகிப் போகும்.

என்னுடைய பெற்றோர்கள் இறுதி வரை என்னுடன் வரப்போவதில்லை என்னுடைய மனைவி, மக்களும் வீதி வரை மட்டுமே என்னுடன் வருவார்கள்.

பிறகு எதற்காக நான் இவர்களுக்காக பாடுபட வேண்டும்.

 என் சுகத்திற்காக பாடுபட்டாலும் அதுவும் நிரந்தரம் இல்லை.

பிறகு நான் என்னதான் செய்யவேண்டும் பெரியவரே எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா!.

துறவி :

 அப்படியல்ல கண்ணா சும்மா சோம்பேறித்தனமாக எந்த வேலையும் செய்யாமல் இருப்பது மிகவும் தவறு.

நீ பற்று கொண்டுள்ள அனைத்தின் மேலும் பற்றற்றவனாக உன்னை நிலைநிறுத்தி  பற்றுள்ளதை பற்றிக் கொள்ளவேண்டும்.

கண்ணன் : 

நீங்கள் கூறுவது விளங்கவில்லையே பெரியவரே?.

துறவி :

கண்ணா உன்னுடைய ஆசைகளும் தேவைகளும் என்னவாக இருக்கிறது.

கண்ணன் ‌:

நான் மிகப் பெரிய பணக்காரனாக வேண்டும். இந்த உலகம் முழுவதும் எனக்கு பேரு புகழ் கிடைக்க வேண்டும்.

என் பெற்றோர்களுக்கு சந்தோசத்தை நல்கிட வேண்டும்.

என்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும்.

 அடுத்து நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

எனக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு துன்பத்தை நல்காமல் சுகத்தை நல்க வேண்டும்.

உலகம் முழுவதும் சுற்ற வேண்டும்.

நன்றாக மாமிசம் உண்ண வேண்டும், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி சந்தோசமாக இருக்க வேண்டும். 

இவற்றை எல்லாம் அனுபவிக்க பணம் எனக்கு மிகப் பெரும் தேவையாக இருக்கிறது.

அந்தப் பணம் என்னிடம் இல்லாததால் புலம்பியபடி தங்கள் முன் நிற்கிறேன் பெரியவரே

துறவி :

கண்ணா உன்னுடைய தேவைகளும், ஆசைகளும் இக்கணம் நிறைவேறி விட்டால் நீ அடுத்து என்ன செய்வாய்.

கண்ணன் :

நீங்கள் கூறுவது போல் அனைத்து சந்தோசங்களும் எனக்கு கிடைத்து விட்டால் நான் சந்தோசங்களை வைத்து சந்தோசமாக இருப்பேன். மேலும் உலகில் இருக்கும் அனைத்து சந்தோசங்களையும் எனதாக்கிக்கொள்ள முயற்சி செய்வேன்.

துறவி :

பார்த்தாயா கண்ணா உன்னிடம் ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப சந்தோசங்கள் கிடைத்து விட்டால் நீ அவற்றைப் போதுமானதாக எண்ணாமல் மேற்கொண்டு அனைத்து சந்தோசங்களையும் பெற முயற்சி செய்கிறாய்.

 இதனால் தான் மனிதன் ஏற்றத்தாழ்வுடன் பிறக்கின்றான்.

மனிதனுக்கு அனைத்தும் கிடைத்து விட்டால் அவன் அச்சந்தோசங்களை அவனுக்குப் போதுமானது என எண்ணி அவற்றுடன் நிறுத்துவதில்லை.

 மேற்கொண்டு சந்தோசங்களை தனது குடும்பம் மட்டுமல்லாது குடும்பத்தின் குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்காக பிறரது சந்தோசத்தையும் அவனே அபகரித்துக் கொள்ள முயற்சி செய்கிறான்.


உன்னுடைய தேவைகளும், ஆசைகளும் என்றும் தீரப்போவதில்லை கண்ணா அது தொடர்ந்து கொண்டே தான் செல்லும் நீதான் அவற்றைப் புரிந்துகொண்டு உனக்கு அத்தியாவசியமானவையை மட்டும் அனுபவித்து மற்றதை மற்றவர்களுக்கு விட்டு விட வேண்டும்.

உன் பசி ஆற்றுவதற்காக உணவு உட்கொள்ளலாம் ஆனால் உன் ருசி ஆற்றுவதற்காக என்றும் உணவு உட்கொள்ளக்கூடாது.

தேவை என்பது வாழ்வதற்காக இருக்க வேண்டும் ஆடம்பரத்தை கூட்டுவதற்காக இருக்க கூடாது.

போதை ஆனது வாழ்க்கையை கூட்டுவதற்காக இருக்க வேண்டும் உடலையும், மனதையும் கெடுப்பதற்காக இருக்கக் கூடாது.

நன்றாக யோசித்துப் பார் கண்ணா  உனது பெற்றோர்களுக்கு நீ மகன் என்ற அன்பு உணர்ச்சியை நீக்கி விட்டால் அவர்கள் உன்னை நேசிப்பார்களா இல்லை உனக்காகத்தான் பாடுபடுவார்களா.

 அல்லது உன்னிடமிருந்து உனது பெற்றோர்களுக்கான அன்பு எனும் உணர்வை நீக்கிவிட்டால் நீதான் உன் பெற்றோர்களை நேசிப்பாயா.

 இந்த அன்பு என்பது அனைவரும் சேர்ந்து வாழ்வதற்காகவும், வாழ்க்கையின் உண்மையை புரிந்து கொள்வதற்காகவும் இறைவனால் இறைவனிடமிருந்து தரப்பட்ட ஒரு மிகப்பெரும் சக்தியாகும்.

உடலை பள்ளிக்கூடமாக்கு  மனதை மாணவனாக்கு, உன் அறிவை அதற்கு குருவாக்கு கண்ணா.

கண்ணன் ‌: 

அப்படியெனில் எனது ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றாமல் இருக்கவேண்டுமா பெரியவரே?.

துறவி : 

அப்படியல்ல கண்ணா உனது ஆசைகளையும், தேவைகளையும் நீ குறைத்துக்கொள்ளவேண்டும்.

 ஆடம்பரத்திற்கு ஆசைப்படுதல் கூடாது அது உனக்கு மிகப்பெரும் போதையை நல்க வாய்ப்புள்ளது.

அப்போதை உன் உடலே நிரந்தரம் இந்த வாழ்க்கையே நிஜம் என நம்பவைத்து உன் கண்ணைக்கட்டி மரணம் வரைக்கும் கூட்டி சென்று குழிக்குள் தள்ளி விட்டு பிறகு வேறு ஒருவரைப் பிடித்துக் கொள்ளும்.

மனிதன் சிந்திப்பதற்கும் தான் யார் என உணர்வதற்கும் அவனுக்கு சில துன்பங்கள் நேரிடுவது அவசியம் அத்துன்பம் அவனை அவனது வாழ்க்கையில் இருந்து விரக்தி என்னும் நிலைக்கு தள்ளும்.

 விரக்தி என்பது ஒரு மனிதனை தற்கொலை முயற்சி செய்யத் தூண்டுவதை தாண்டி நாம் ஏன் இப்படி பிறந்துள்ளோம் இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது என சிந்திக்கத்தூண்டும் அந்த சிந்தனை அவனை எண்ணிலிருந்து(number) பூஜ்ஜியமாக்க முயற்சி செய்யும்.

கண்ணன் :

எண்ணிலிருந்து பூஜ்ஜியமாக வேண்டுமா அப்படி என்றால்?.

துறவி :

கண்ணா நான் முன்பே கூறியிருந்தேன் இறைவன் பூஜ்ஜியமானவன் என்று நாமெல்லாம் அப்பூஜ்ஜியத்திலிருந்து எண்ணாக(number) வந்தோம்.

நாம் வெறும் எண்ணாக இருப்பதால் நாம் அந்த எண்ணிற்கு உண்டான சிறப்பை மட்டுமே பெற்றுள்ளோம்.

அதாவது நாம் நம்மை வெறும் மனிதனாகவோ அல்லது இப்புவியில் வாழ்கின்ற ஒரு உயிரினமாகவோ நம்மை நாமே கருதிக் கொள்கின்றோம். ஆனால், நமக்குள்ளும் பூஜ்ஜியம் என்ற இறைவன் உள்ளதை நாம் உணராமல் நம்முடைய சந்தோஷங்களுக்காகவும், தேவையற்ற சுகத்திற்காகவும் வாழ்க்கையின் உண்மையை புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து மடிகின்றோம்.

நான் ஒரு மனிதன், நான் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் என் வாழ்க்கையே நிஜம் இந்த சுகமே எனக்கு முக்கியம் என எண்ணி வாழ்வதைவிட்டு நமக்குள் இருக்கும் இறைவனை உணர முயற்சி செய்வதே இந்த வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகும் கண்ணா.

கண்ணன் :

என்னால் எப்படி எனக்குள் இருக்கும் இறைவனை உணர முடியும் என்னால் இறைவனாக முடியுமா பெரியவரே?

துறவி :

நிச்சயம் முடியும் கண்ணா! நீ உன் மன எண்ணங்களை அடக்கி அன்பை வளர்த்து கண்களை மூடி உன் மூச்சுக்காற்று உன் உடம்பில் எங்கெல்லாம் பாய்கிறது என எண்ணி முழு மன அமைதியை அடைந்து.

 நான் வெறும் எண்ணல்ல அதாவது நான் வெறும் மனிதன் அல்ல நான் இறந்துவிட்டால் என் உயிர் எங்கே செல்கிறது நான் உயிருடன் இருக்கும் பொழுது அந்த உயிர் எங்கே உள்ளது.

 நான் ஏன் பிறக்கின்றேன், நான் ஏன் இறக்கின்றேன். என் உடம்பில் எது இல்லாமல் போனால் இறந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர்.

 அந்த ஒன்று எது அதை நான் பார்த்தாக வேண்டும் என முழு மனதுடன் மனதை நிலைநிறுத்தி உனக்குள் பார்த்தாயானால் நீ அதை காண்பாய் கண்ணா.

அந்த ஒன்றே இறைவன் ஆகும் கண்ணா. இறைவன் அவனிலிருந்தே அனைத்து உயிர்களையும் படைத்தான் அவன் நமக்குள்ளே தான் உள்ளான்.

 நம் உடம்பே தான் கோயில் நம் உயிர்தான் கடவுள். அந்த உயிரை காணும் மனிதன், தான் வெறும் எண் என்பதை மறந்து பூஜ்ஜியம் என்பதை உணர்ந்து, அதாவது தான் வெறும் எண்ணல்ல இப்பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள அனைத்துமாவேன் என்பதை உணர்ந்து அவற்றை அறிந்தால் அவனும் இறைவன் ஆகின்றான்.

கண்ணன் :

இவ்வாறு எனக்குள் இருக்கும் உயிரை உணர்வதுதான் இறை உணர்வா பெரியவரே?.

அவ்வாறு நான் அனைத்தையும் அறிந்து என் உயிரை உணர்ந்து விட்டால் நான் இறப்பற்றவனாக மாறி இறைவன் ஆகிவிட முடியுமா பெரியவரே?.

துறவி :

நிச்சயமாக முடியும் கண்ணா உனக்குள் இருக்கும் உயிர் என்னும் ஆத்மனை நீ உணர்ந்து விட்டால் உனக்கு உன் உயிரின் அதாவது ஆத்மனின் தரிசனம் கிடைத்து விடும். 

ஆத்மன் என்பது இறைவனிடம் இருந்து  அனைத்து உயிர்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு ஆற்றல் ஆகும்.

எவ்வாறு கடலில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு துளி நீரும் கடல் நீர் எனப்படுமோ, அதேபோல் இறைவனிடமிருந்து தரப்பட்ட இந்த ஆற்றலும் இறைவன் ஆகும்.

அந்த ஆத்மா எனும் ஆற்றலே உன் உடலை இயக்குகிறது அந்த உயிர் உடலைவிட்டு நீங்கிய பின் உடலில் எந்த இயக்கமும் இல்லாத வெறும் பினமாகிறது.

நீ என்பது உன் உடல் கிடையாது கண்ணா. 

உன் அடையாளம்  உன் ஆத்மனே ஆகும்.

நீ முந்தைய ஜென்மங்களில் பெண்ணாக கூட பாத்திரம் ஏற்று நடித்திர்களாம் அல்லது வேறு ஏதாவது உயிரினம் ஆகாவும் பாத்திரம் ஏற்று நடித்து இருக்கலாம்.

இதேபோல் உன் கதாபாத்திரங்கள் மாறிக் கொண்டேதான் இருக்கும். உன் உடல் தோற்றமும் மாறிக் கொண்டே தான் இருக்கும்.

 இந்த சுழற்சி முறை நிற்க வேண்டுமெனில் அதற்கு மனித உடல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

 இந்த மனிதப் பிறப்பில் தான் உன்னுடைய ஆத்மனை நீ உணர முடியும் இந்த பிறப்பை நீ விட்டுவிட்டால் அடுத்து எத்தனையோ கோடி பிறப்புகள் கழித்துதான்  இந்த மனிதப் பிறப்பு கிடைக்கும்.

நான் இங்கு உனக்கு கூறுகின்ற இந்த ஞானம் இங்கு உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்காத அற்புத ஞானமாகும்.

 இந்த ஞானம் யாரிடம் வந்து சேர்கிறது அவர்கள் இறைவனை சேரும் நாட்கள் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.

இப்போது இது உன்னை வந்து சேர்ந்துள்ளது.

 இந்த ஞாணத்தை நீ உதாசினப்படுத்தி விட்டாய் என்றால் பிறகு இது உனக்கு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

கண்ணன் :

ஏன் நீங்கள் இந்த ஞானத்தை என்னிடம் மட்டும் சொல்ல வேண்டும். 

நீங்கள் இதை அனைத்து மனிதர்களிடத்தில் கூறினால் அனைவருமே இறை நிலையை அடைவார்கள் தானே அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள் அல்லவா பெரியவரே?.

துறவி :

இல்லை கண்ணா இந்த ஞானத்தை இங்கு உள்ள அனைவரிடமும் கூறினாலும் யாரும் இந்ஞானத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,

 ஏனெனில் யாருமே அவர்கள் சுகத்தை விட்டு தர மறுப்பார்கள். அப்படியே நான் ஞானத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தாலும் அவர்கள் ஞானத்தை உதாசினப்படுத்தி நல்லதை பரப்புவோர்களையும் உதாசினப்படுத்துவதார்கள்.

அதுமட்டுமில்லாமல் இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் அவர்களாகவே தங்களின் வாழ்க்கைத் தேவையை உணர்ந்து இறைஞானம் பெற விரும்புவர்கள்.

 உனக்கு எப்படி ஞானம் கிடைத்ததோ அதே போல் அவர்களுக்கும் இந்த ஞானம் கிடைக்கும்.

இவ்வளவு ஏன் எனக்கும் உன்னைப் போல் தான் நான் சிறு வயதாக இருக்கும் பொழுது எனக்கும் இதே போன்ற ஒரு பெரியவர் ஞான உபதேசம் வழங்கினார்.

 அந்த ஞானத்தை நான் உணர விரும்பினேன் அதற்காக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை அத்தனையும் செய்தேன் இப்போது அந்த ஞானம் எனக்கு கிடைத்தது எனக்கு கிடைத்த ஞானத்தை உன்னை போன்று பலருக்கும் கூறி வருகின்றேன்.

 கண்ணா இந்த ஞானமே பிரபஜ்ஜத்தின் ஒட்டுமொத்த ஞானமாகவும்.

 இந்த ஞானத்தை சிலரால் மட்டுமே புரிந்து அதன் வழி செல்ல முடியும் கோடியில் ஒருவனே இந்த ஞானத்தை உணர முடியும்.

கண்ணன் :

அப்படி என்றால் இந்த ஞானத்தை என்னால் உணர முடியாத பெரியவரே?.

துறவி :

அப்படியல்ல கண்ணா!  அனைவரிடத்துல்லும் இந்ஞானம் இருக்கும். ஆனால், இந்த ஞானத்தை அடையும் வழியானது கொஞ்சம் கடினமே அதனால் தான் அனைவரும் இந்ஞானத்தை கேட்டும் கேட்காதது போல் சென்றுவிடுவார்கள்.

இவ்வளவு ஏன் நீயே இந்த ஞானத்தை உன் நண்பர்களிடம் கூறி பார் அவர்களில் எத்தனைபேர் இதற்கு செவி கொடுக்கிறார்கள் என்று பார். 

 அன்பின் விதைகள் யாரிடம் அதிகமாக உள்ளதோ அவர்கள் நிச்சயமாக இந்ஞானத்தை அடைவார்கள் கண்ணா.

உன்னிடம் இப்பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஞானத்தையும் கூறினேன். இந்ஞானத்தை  உணர நீ எவ்வாறு முயற்சி செய்கிறாய் என்பதே இதற்கு முக்கியம்.

 ஞானத்தை உணரும் வழி உன் கையில் தான் உள்ளது கண்ணா.

கண்ணன் :

பெரியவரே நான் இதுவரை  கேட்டிராத அதிசயங்களையும், அற்புதங்களையும், வாழ்க்கையின் ஒட்டுமொத்த ரகசியங்களையும் என்னிடம் கூறினீர்.

நான் இந்த உலக மாயையிலிருந்து விடுபட்டு நீங்கள் கூறினதை பின்பற்ற முயற்சி செய்கிறேன் பெரியவரே.

இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

 வாழ்க்கை என்றால் சந்தோசத்தை அனுபவிப்பதும், பணம் சம்பாதிப்பதும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

 ஆனால், நீங்கள் தந்த இந்த உபதேசம் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நான் நினைக்கின்றேன்.

 நிச்சயமாக நான் இந்ஞானத்தை உணர்ந்தால் மீண்டும் உங்களை தேடி நான் வருவேன்.

இரவு நேரமாகிவிட்டது பெரியவரே நான் வீட்டிற்கு செல்லாவிட்டால் என் பெற்றோர்கள் என்னை தேடுவார்கள் நான் சென்று வருகிறேன் பெரியவரே.

துறவி :

செல் கண்ணா நானும் வந்த வேலை முடிந்துவிட்டது.

 உனக்கு எப்பொழுது மனக்குழப்பம் ஏற்பட்டாலும் இவ்விடத்திற்கு வந்து சிறிது நேரம் அமர்ந்து என்னை அலை நான் வருவேன்.

கண்ணண் :

சரி பெரியவரே?.

------------------------------------------------------------------

கண்ணனும் துறவியும் உரையாடிக்கொண்ட உரையாடலானது முடிந்து இருவரும் அவ்விடத்தை விட்டு சென்று விட்டனர்.

 இனி கண்ணன் இந்த ஞானத்தை வைத்துக் கொண்டு தன் வாழ்க்கையின் மாயையை உடைத்தானா அல்லது என்ன செய்யப் போகிறான் என்பதை அடுத்த பதிவில் காணலாம்.

இப்பதிவை முழுவதுமாக வாசித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி....


Post a Comment

0 Comments