Advertisement

Responsive Advertisement

மனிதன் என்ற ஒரு மனிதன்

 



அன்பு சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் இப்பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் இங்குள்ள ஒவ்வொருவரின் மனதிலும் பல குணாதிசயங்கள் உள்ளன அதில் நாம் எந்த குணாதிசயத்தை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி ஒரு கதையின் வாயிலாக காண்போம்

ஒரு ஊரில் மனிதன் என்ற ஒரு மனிதன் இருந்தான் அவனுக்கு தீயவன், பொய்யன், போறாமை, கோபம் ஆசை என்பவள் போன்றவர்கள் நண்பர்களாக இருந்தார்கள்.

இந்த மனிதன் அவன் நண்பர்கள் கூறுவதை மட்டுமே  செய்து கொண்டிருந்தான்.

அவர்கள் கூறுவதைக் கேட்டு இவன் செய்வதால் இவனுக்கு சுகம் கிடைக்கிறது என எண்ணினான்.

ஒருநாள் இந்த மனிதனும், அவன் நண்பர்களும் வழியில் நடந்து கொண்டிருக்கும் பொழுது கீழே பணம் கிடந்தது அதை கண்ட மனிதன் என்ன செய்யலாம் என்று யோசித்தான் அப்பொழுது ஆசை என்பவள் அவனிடம் அந்த பணத்தை நாம் எடுத்து சுவையான உணவுகளைையும் நமக்கு தேவையானவற்றையும் வாங்கிக் கொள்ளலாம் என கூறினாள்.

அவன் கூட இருந்த தீயவனும் அவனிடம் அப்பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினான். இதனால் அந்த மனிதன் அப்பணத்தை யாருக்கும் தெரியாமல் அவனது சட்டைப் பைக்குள் எடுத்து வைத்தான்.

ஆசை என்பவள் அப்பணத்தை வைத்து தெருவோரங்களில் இருக்கும் கடைகளில் சுவையான உணவுகளை உண்ணலாம் என்று மனிதனிடம் கூறி அவனை அழைத்துச் சென்று உடலுக்கு பாதிப்பான உணவு என்று தெரிந்தும் அந்த உணவை சுவைக்காக அந்த மனிதன் உன்றான்.

அப்படியே நாட்கள் செல்ல செல்ல அந்த மனிதன் அவனது நண்பர்கள் கூறுவதை மட்டுமே கேட்டு போதைக்கு அடிமையாகி  திருட்டு, பொய், துரோகம் போன்றவையே தனது சுகம் என்று எண்ணி தன்னை சுற்றியுள்ள அனைத்து மனிதர்களுக்கும் தீங்கிளைத்தான்.

ஒரு நாள் அந்த மனிதன் வைத்திருந்த பணம் எங்கேயோ கீழே விழுந்துவிட்டது அப்பணம் அந்த மனிதனின் பெற்றோர்கள் தந்த பணம் அதனால் அந்த மனிதன் வருந்திக் கொண்டிருந்தான்.

 அவன் கூட இருந்த நண்பர்கள் நாம் இந்த பணத்தை வேறு யாரிடமிருந்தாவது திருடி கொள்ளலாம் என்று யோசனை தந்தனர்.

அந்த மனிதனும் அப்படியே செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். 

அப்பொழுது அந்த மனிதனை நோக்கி அன்பு என்பவள் இந்த பணம் உங்களுடையதா என்று கேட்டாள்.

அதற்கு அந்த மனிதன் ஆமாம் இது என் பணம் தான் என்னுடைய பெற்றோர்கள் எனக்கு தந்த பணம் நான் வரும் வழியில் எங்கேயோ அதை தொலைத்து விட்டேன். அப்பணத்தை காணோம் என்று மிகவும் வருந்திக் கொண்டிருந்தேன்.

நல்ல வேலையாக நீங்கள் அப்பணத்தை என்னிடம் கொண்டு வந்துள்ளீர்கள்.

 எப்படி நான் தான் இப்பணத்தை தொலைத்தேன் என்று உங்களுக்கு தெரியும், எப்படி உங்களுக்கு இப்பணத்தை என்னிடம் கொடுக்க மனம் வந்தது.

நான் நீங்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது உங்கள் பின்னாலேயே தான் நடந்து வந்து கொண்டிருந்தேன், அப்பொழுது நீங்கள் உங்களது சட்டைப்பையில் கைவிடும்போது பணம் கீழே விழுந்ததை நான் கண்டேன் அதனாலே உங்களைப் பின்தொடர்ந்து வந்து பணத்தை உங்களிடம் தந்தேன்.

 அதுமட்டுமில்லாமல், பிறர் பணத்தை நாம் அபகரிக்க முயற்சி செய்தால் நம் பணம் பிறரால் அபகரிக்கப்படும் பிறர் பணத்திற்கு ஆசைப்படாமல் இருப்பது என்றும் நல்லது என்றாள் அன்பு.

இதைக் கேட்டதும் அந்த மனிதன் நீங்கள் மிகவும் நல்ல பெண்ணாக இருக்கிறீர்கள் நாம் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் என்றான்.

அதற்கு அன்பு நிச்சயமாக நாம் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் தினமும் நாம் சந்தித்துக் கொள்வோம் என்றாள்.

அன்பு அந்த மனிதனுக்கு நன்பணானதை கண்ட தீயவன், பொய்யன்,  பொறாமை, கோபம், மற்றும் ஆசை என்பவள் அந்த அன்பு என்பவள் மீது மிகவும் கோபம் கொண்டனர்.

அவளை பற்றி அவதூறாகவும் அவளது நட்பு உனக்கு வேண்டாம் என்றும் அந்த ஐவரும் மனிதனிடம் கூறினர்.

அதற்கு அந்த மனிதன் அவள் செய்த நல்லதுதான் இன்று என்னிடம் தொலைந்த பணம் உள்ளது அவளது நட்பு நமக்கு தேவை என்று கூறினான்.

அடுத்த நாள் அந்த மனிதன் அன்புவை சந்தித்தான் அன்புவுடன், நல்லவன் உண்மை, உழைப்பு, தைரியம், தன்நம்பிக்கை, பொறுமை  என்ற நண்பர்கள் இருந்தார்கள்.

அன்பு இவர்களை அந்த மனிதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

மனிதனும் அன்புவின் நண்பர்களுடன் நட்பு பாராட்ட தொடங்கினான்.

ஒரு நாள் மனிதனின் நண்பர்களான தீயவன், பொறாமை, பொய்யன், கோபம் மற்றும் ஆசை என்பவர்கள் மனிதனிடம் நாம் போதை ஏற்றிக் கொண்டு சூது விளையாடி பணம் சம்பாதிப்போம் என்று அவனை அழைத்துச் சென்றனர்.

மனிதன் அவர்களின் பேச்சைக் கேட்டு சூது விளையாடினான் அதனால் அவனிடம் இருந்த அனைத்து பணத்தையும் இழந்து கொண்டிருந்தான்.

 அப்பொழுது, காவல்துறையினர் அவர்கள் சூது விளையாடும் இடத்திற்கு விரைந்தனர்.

 காவலர்கள் அங்கு சூது விளையாடி கொண்டிருந்த அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மனிதன் சிறு பையனாக இருந்ததால் அவனது பெற்றோர்களை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு வர வைத்தனர்.

 மனிதனின் பெற்றோரிடத்தில் இவன் தவறான பழக்கத்தால் தவறான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான் இவனை கண்டித்து வையுங்கள் என்று காவல் அதிகாரி மனிதனது பெற்றோரிடத்தில் கூறி அவனை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

மனிதனது பெற்றோர்கள் அவனை அடித்து, இந்த தீய பழக்கத்தை யார் உனக்கு கற்றுத் தந்தனர் என்று கேட்டு மிரட்டினார்.

 அதற்கு மனிதன் என்னுடைய பழைய நண்பர்கள் பேச்சைக் கேட்டு இத்தவறை நான் செய்தேன் இனிமேல் இத்தவறை நான் செய்ய மாட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று அழுது மன்றாடினான்.

 இனிமேல் நீ அந்த நண்பர்களுடன் சேரக் கூடாது என்று கூறி பெற்றோர்கள் மனிதனை மன்னித்து விட்டனர்.

அப்பொழுது மனிதனை பார்க்க அன்புவும் அவளது நண்பர்களும் மனிதனது வீட்டிற்கு வந்தனர்.

மனிதன் அவர்களைப் பார்த்து கண் கலங்கினான் உடனே அன்புவின் நண்பர்கள் அனைவரும் மனிதனின் மீது அக்கறை காட்டினர் அதில் அன்பு மட்டும் மனிதனுக்கு கூடுதல் அக்கறை காட்டினாள்.

அதனால் மனிதனுக்கு அன்புவின் மீது காதல் ஈர்ப்பு ஏற்பட்டது.

மனிதன் தனது பழைய நண்பர்களுடன் சேருவதை விட்டுவிட்டு புதிய நண்பர்களான அன்புவின் நண்பர்களுடன் சேர ஆரம்பித்தான்.

அன்புவும் அவளது நண்பர்களும் மனிதனுக்கு அறிவுரை வழங்கினார்.

 அப்பொழுது அன்பு மனிதனிடம் உனது பழைய நண்பர்கள் உனக்கு சுகம் தருவது போல் தந்து பின்னாளில் உன்னை வருத்தம் அடையச் செய்கின்றனர் அதனால் நீ அவர்களுடன் சேருவதை விட்டுவிடு என்று கூறினாள்.

அதைக்கேட்ட மனிதனும் அன்புவிடம் சத்தியம் செய்து கொடுத்தான் அதன்பிறகு இருவரும் காதல் வயப்பட தொடங்கினர்.

இருவரும் நன்றாக பழகி திருமணம் செய்யும் அளவிற்கு காதல் வலுக்கத் தொடங்கியது.

அப்பொழுது  மனிதனின், முன்னாள் நண்பர்கள் அவனை சந்திக்க வந்தனர் மனிதன் அவர்களிடம் கோபத்தை வெளியிட்டான். தீயவன் மனிதனை பார்த்து இவர்கள் உனக்கு சுகத்தை நல்க மாட்டார்கள் என்றாள்.

மீண்டும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள். நீ ஆசையை திருமணம் செய்துகொள் அவள் உன் மேல் பைத்தியமாக இருக்கிறாள் என்று மனிதனிடம் கூறினார்.

அதற்கு மனிதன் நீங்கள் அனைவரும் தவறானவர்கள் உங்களால் தான் நான் அன்று தவறிலைத்தேன்.

 பல மனிதர்களுக்கும் என்னால் துன்பம் ஏற்பட்டது அதனுடன் மட்டுமல்லாமல் உங்களால் தான் நான் மது அருந்தி பழகிவிட்டேன் அதனால் எனக்கு உடல் குறை ஏற்பட்டது.

 நீங்கள் எனக்கு சுகத்தை தருவதுபோல் தந்து விட்டு பிறகு துன்பத்தையே தருகிறீர்கள்.

 நீங்கள் அனைவரும் இங்குள்ள எந்த மனிதர்களுக்கும் தேவை இல்லாதவர்கள்.

எனக்கு கிடைத்த புது நண்பர்கள் என்றும் என்னுடன் அன்பு பாராட்டுகின்றனர் மற்றும் நல்லதையே எனக்கு கற்றுத் தருகின்றனர்.

 நான் காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் நீங்கள் என்னை பார்க்க கூட என் வீட்டிற்கு வரவில்லை.

 ஆனால், இவர்கள் என்னை பார்க்க ஓடோடி வந்தனர் இவர்களே உண்மையான நண்பர்கள்.

 இவர்களால் தான் என் வாழ்க்கை செழிக்க போகிறது.

 தயை கூர்ந்து என்னை விட்டு விலகிச் செல்லுங்கள் இனி என் மூஞ்சியில் கூட முளிக்காதீர்கள்.

என்று மனிதன் அவர்களிடம் கூறினான் அவர்கள் மனிதனை விட்டு சென்று விட்டனர்.

மனிதன் அன்புவை மிகவும் காதலித்தான் அதனால் அன்புவையே திருமணமும் செய்துகொண்டான்.

 மனிதன் அன்புவை திருமணம் செய்து கொண்டதால் அவனுக்கு அமைதி, பேர், புகழ், செல்வம், நேர்மை, பொதுநலம், தைரியம் என்ற மகன்களும் கருனை,மனசாட்சி, அக்கறை என்ற மகள்களும் பிறந்தனர்.

மனிதன் தன் வாழ்க்கையை நிம்மதியுடன் வாழ தொடங்கினான்.

இக்கதையில் மனிதன் என்பது நாம் அனைவருமே நம்மிடம் தீமை, பொறாமை, பொய், கோபம், துரோகம்,பயம், ஆசை போன்ற தேவையற்ற குணங்கள் உள்ளன.

இக்குணங்களாள் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை வாழ்வதை விட்டுவிட்டு வீனடிக்க தொடங்குகிறான் இந்தத் தீய குணங்களால் மனிதனுக்கு அப்போதைய சுகம் மட்டுமே கிடைக்கிறது.

 இந்த தீய குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னாளில் மிகப் பெரும் துன்பத்தை விளைவிக்க தயாராக இருக்கிறது.

இந்த தீயகுணங்களை விட்டுவிட்டு மேலே குறிப்பிட்ட அன்பு, உண்மை, நன்மை உழைப்பு, பொறுமை போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டாலே ஒவ்வொரு மனிதனுக்கும் அமைதி, செல்வம், புகழ், வெற்றி,தைரியம் போன்றவை கிடைக்கும்.

நமக்குள் தான் இவ்விரண்டு குணங்களும் இருக்கிறது.

 நாம் எந்த குணத்தின் பக்கம் அதிகமாக கவனத்தை செலுத்துகிறோம் என்பதை அறிந்தாலே நம் வாழ்க்கை எந்தவித துன்பமும் இன்றி செல்லும்.

அனைவரும் நாம் எந்த குணங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இந்த பதிவை முழுவதுமாக வாசித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏





 





Post a Comment

0 Comments