அரசியல்
போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து சொல்வேன்ஏற்றதொரு கருத்தை என(து) உள்ளம் என்றால்எடுத்துரைப்பேன்; எவர் வரினும், நில்லேன் ! அஞ்சேன்
1) இயற்கையாக அழுது அறியாதவன் செயற்கையாக அழுது பழகுவதற்குப் பெயரே, அரசியல்.
2) எந்த வெற்றிக்கும் தலைவர்கள் மட்டுமே காரணமல்ல; படைகள்தாம் பெரும் காரணம். ஆயினும் விழாக் கொண்டாடுவது தலைவனுக்கு மட்டும் தானே!
3) ஆணவம் வெற்றியில் கொண்டவன் தோல்வியை அருகே அழைக்கிறான்.
வாரிசு பாத்தியதை யாருக்கு நாட்டின் என்பதை விட, பாதுகாப்புக்கு யார் தகுதியானவர் என்பதே முக்கியம்.
4) 'அரசியல் மனிதனை'த் துணைவனாகக் கொண்ட பேதைக்கு நீடித்த நிம்மதி என்பது ஏது?
5) ஒரே கேள்வியை ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருக்க அரசியல் வாதிகளால் மட்டும்தான் முடியும். அதற்கு ஒரே பதிலைச் சொல்ல காதலிகளால் தான் முடியும்.
6) நம்மிடம் தோற்றுப் போனவர்கள் எல்லாரும் நிரந்தரமாகத் தோற்றவர்களல்லர். தங்கள் வல்லமை கருதி இன்று அவர்கள் அடங்கியிருக்கிறார்கள்.
7) ஈடுகட்ட முடியாத ஒரு தலைவன் தன் இடத்தைக் காலி செய்யப் போகிறான் என்றால் அடுத்த வரிசையிலுள்ளவர்களுக்குள் பலப் பரீட்சை நடப்பது இயற்கை.
8) தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவனுக்குப் பதவி எதற்கு? அவன் எது நடக்கவேண்டும் என்று விரும்புகிறானோ அதை யாராவது நடத்திக் காட்டுவார்கள். யாராவது என்றால் யார், யார்? அவர்கள் இறைவனுடைய பிரதிபிம்பங்கள்.
9) அதிகாரம் மக்களுக்கே என்று இருப்பவன், தக்கவர் கூடும் இடத்தில் தலைகுனிந்து நிற்பான். கோழைத்தனத்தால் அல்ல; அடக்கத்தினால்!
10) நெல்லைத் தூற்றும்போது பதர்கள் எல்லாம் ஒரு பக்கம் குவியும் ; மணிகளெல்லாம் ஒரு பக்கம் குவியும் ; மணியை விட அதிக விலைக்குப் பதர்களை விற்கத் தெரிந்தவன் அரசியல் வாதி.
11) ஒரு தலைவன் நான் கணித மேதையில்லை என்று ஒப்புக் கொள்வதில் பெருமையில்லை! அப்படி இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
12) இறுதியில் இருக்குமிடம் தெரியாமல் போவது. இன்னொன்று குறுக்கு வழியில் இறங்கி, காய்களை நகர்த்தி, நண்பனையோ உறவினனையோ கொல்ல வேண்டுமென்றால் கொன்று, அரங்கத்தில் நேர்மையாக நடித்து, அந்தரங்கத்தில் வஞ்சகனாகி எந்த வழியில் வெற்றி கிடைக்குமானாலும் அந்த வழியை நாடுவது. மகாபாரதம் இரண்டுக்கும் உதாரணம் காட்டுகிறது. நேர்வழிக்குப் பரந்தாமன், குறுக்கு வழிக்கு சகுனி.
13) ஆதிக்கத்தை சாதிக்க முயன்றால் நீதிக்கும் ஒரு போர் நடத்த வேண்டியிருக்கும்.
14) பெரும்பாலான மக்கள் அரச பீடத்தில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. தங்களது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் போதும் என்பதுதான் அவர்கள் நிலை.
15) மணி மகுடங்கள் மனிதர்களால் செய்யப்படுகின்றன. ஆகவே, அவை எந்த சிரசுக்கும் பொருந்தக் கூடியவையே! ஒரே சிரசில் அவை அமர்ந்திருந்தால், சிருஷ்டி நாயகனின் இயக்கம் புரியாமல் போய்விடும். காலங்களே சிரசுகளை நிர்ணயிக்கின்றன. ஒவ்வோர் அரசு மாறும் போதும் தங்களுக்கு ஏதோ நன்மை நடக்கப் போகிறது என்று எண்ணுவது மக்களின் பழக்கம்!
17) பதவிக்கு வந்த உடனே நோயாளி கூடச் சுறுசுறுப்பாக இயங்குவான்.
18) சூழ்ச்சியால் பதவி பெற்றவன் அதைக் கண்ணீரோடு ஒருநாள் இழக்க வேண்டியிருக்கும். ஆட்சியைத் தவறாக அடைந்தவன் வீழ்ச்சிக்கும் தயாராக இருக்க வேண்டும்.
19) பிறரை அழவைப்பவர்கள் தங்கள் கண்களிலும் கண்ணீர் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. பிறரது அவமானத்தில் மகிழ்ச்சி கொள்பவர்கள் தாங்களும் அந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்க வேண்டும்.
20) அரசியலில் முன்னேற விரும்புகிறவன் தன்னுடன் பணி செய்வோர் மீது கோபம் வந்தால் உடனேயே காட்டிக் கொள்ளக் கூடாது. காத்திருந்து கழுத்தறுக்க வேண்டும் என்பது ராஜ தந்திரம்.
* * * * * * * * * * * * * * * * * * *

2 Comments
அறம் அரசியல் மாறி
ReplyDeleteவியாபாரம் அரசியல் ஆகிவிட்டது.
சுயநலமே பொதுநலமாக மாறிவிட்டது
ReplyDelete