Advertisement

Responsive Advertisement

திருமணம் எனும் வியாபாரம் (Business In Marriage )

 
Business In Marraige


                 பெண்களை அடிமை படுத்துதலே திருமணத்தின் முதல் நோக்கமாகும். பெண் பிள்ளைகள் பிறந்ததில் இருந்து பெற்றோர்கள் அவர்களின் திருமணத்திற்காக நகைகளையும் பணத்தையும் சேகரிக்க தொடங்குவா். இதைக்கண்ட அப்பெண்ணின் மனதில் நகையும் பணமும் இருந்தால் மட்டுமே நமக்கு திருமணம் என்னும் நிகழ்வு வாழ்வில் நடைபெறும் என்னும் தவறான கருத்து மனதில் பதிகிறது. பெற்றோர்கள் தங்கள் ஆண் பிள்ளைகளை எந்த ஒரு வேலையும் செய்யச் சொல்லாமல் தன் பெண் பிள்ளைகளை மட்டுமே வேலைகளை செய்யச் சொல்லி வற்புறுத்துவர். மறு வீட்டிற்கு வாழப்போகும் பெண் அதனால் நம் வீட்டில் இருந்தே வேலைகளை செய்து பழக வேண்டும் என்ற காரணத்தையும் சொல்லுவர்.
இதிலிருந்துதான் ஒரு பெண் அடிமைப் பொருளாக மாறுகிறாள்.

              பள்ளிப் படிப்பு முடியும் வரை தனது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்கள் தைரியமாக பெற்றோர்களிடம் கூறுவார்கள். ஆனால் அவர்கள் கல்லூரி படிப்பு வரும்போது எதைப்பற்றியும் பெற்றோரிடம் கூறுவதில்லை. அதற்கு முதல் காரணம் அப்படி ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவளது பெற்றோர்கள் பிரச்சனையைப் பற்றி விவாதிக்காமல் உடனே அவளது திருமணத்திற்கு தயாராகி விடுவர் . ஒரு பெண் கல்லூரி படிப்பை முடித்தால் அல்லது குறிப்பிட்ட வயது வந்ததும் உடனடியாக திருமணத்தை ஏற்பாடு செய்து நடத்தி விடுவர். இச்செயலின் நோக்கம்தான் என்ன?  தன்னிடம் உள்ள ஒரு பொருளை இவ்வளவு நாட்கள் பத்திரமாக பார்த்துக் கொண்டோம் இனிமேல் இந்த பொருளை மற்றவரிடம் கொடுத்து மேலும் அதற்கு சன்மானமாக பணமும் நகையும் அளித்தது மீதி இருக்கும் நாட்கள் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்பதா ! அல்லது தன்னுடைய அடிமை பட்டறையில் தயார் செய்து அனைத்து வேலைகளையும் சிறப்பாய் செய்யக்கூடிய ஒரு அடிமையை வேறு ஒருவரிடம் விற்று மேலும் அதற்கு பணத்தையும் கொடுத்து இனிமேல் இந்த அடிமை உங்களுடையது எவ்வளவு வேலையானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்பதா ? இப்படிப்பட்ட எண்ணங்கள் சில பெற்றோர்களின் நடவடிக்கையால் எண்ண முடிகிறது.


Business In Marriage-2


ஒரு ஆண் எதற்காக திருமணம் செய்கிறான்?

               தன் குடும்பத்தை பெருக்குவதற்கும் மேலும் தான் பணிக்கு சென்ற வேளையில் தனது பெற்றோரின் கடைசி காலத்தில் கூட உதவியாய் ஒருவர் இருந்து அவர்களுக்கான பணிவிடை  செய்ய ஒரு ஆள் வேண்டும் என்பதற்காக திருமணம் செய்கிறான். தனது பிள்ளைக்காக செய்த படிப்பு மற்றும் இதர செலவுகளை ஒரு முதலீடாக கருதி அதற்கு வட்டியும் முதலுமாய் பணத்தை பெறுவதே திருமணம் என சில பெற்றோர்கள் நினைக்கின்றனர்.
இவ்வாறு இருக்கையில் ஒரு ஆண் தான் வளரவளர தன் சமுதாயத்தை பார்த்து திருந்தாமல் எவ்வாறு இதற்குள் சிக்கிக்கொண்டு அதே தவறை மீண்டும் செய்கிறான் ?.

தன்னுடைய தனிப்பட்ட கோபத்திற்காகவும்  மற்றும் வெறுப்பின் காரணத்தாலும் தனது மனைவியை அடிக்கும் கணவனை அவனது பிள்ளைகள் அவனை தடுக்காது தன் தந்தையை போல ஒரு கொடூரனாய் தன் பிற்காலத்தில் வரக்கூடாது என துளியும் எண்ணாமல் என்னுடைய அன்னை ஒரு இரும்பு மனிதி என புகழாரம் சூட்டும் அந்த இடத்தில் ஆணாதிக்கம் என்ற ஒரு தவறான எண்ணம்
அந்த ஆண் பிள்ளையின் மனதில் பதிகிறது. திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் தனது மனைவிக்காக சிறு சிறு வேலைகளுக்கு உதவியாய் உள்ளதாலும் மேலும் தனது குழந்தைகளை அன்போடு பார்த்துக் கொள்வதாலும் அவன் உயர்ந்த உள்ளம் படைத்தவன் என்றாகாது ஏனெனில் இவையெல்லாம் அவன் அவர்களுக்காக செய்யும் ஒரு சிறு கடமையாகும். சில கணவர்கள் தங்கள் மனைவியிடம் உனக்கு பிடித்ததை எல்லாம் செய் உனக்கு நான் சுதந்திரம் தருகிறேன் என்றெல்லாம் கூறுவர். சுதந்திரம் தருவதற்கு யார் இவர்கள் ? மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த படி வாழ வேண்டும் என்பது இயற்கை.முன்பெலாம் கணவன் தன் மனைவியை அடித்துத் துன்புறுத்தி அடிமைப் படுத்தினான். இப்பொழுதெல்லாம் அவர்களை மனரீதியாக பாதிப்படையச்செய்து  அடிமையாய் இருப்பதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணத்தை விதைத்து அடிமையாக்கிக் கொள்கிறான்.  காதல் திருமணம் என்றாலே பெற்றோர்கள் மறுப்பு தெரிவிப்பதற்க்கு முதல் காரணம் வேற்று சாதி / மதம்.

 இனம் இனத்தோடு தான் சேர வேண்டும்  என்று பழமொழி கூறுவர். இந்த பழமொழியின் விளக்கம் தான் என்ன?

           என்னுடைய பார்வையில் - மனித இனத்தைச் சார்ந்த அனைவரும் தனக்கு ஏற்படும் துன்பங்களுக்காக உதவியைத் தேடி எந்த ஒரு மிருக்கத்திடமும் சென்று முறையிடுவதில்லை மாறாக மனிதனையே சார்ந்து வருகின்றனர். இதுவே இனம் இனத்தைச் சேரும். ஆனால் சிலர் இனத்தை சாதியோடு சேர்த்து அதர்க்கு வேரொரு வர்ணம் தீட்டியுள்ளனர். இயற்கையின் படைப்பில் அனைவரும் சமமே. தன்னை தானே அழிப்பதற்க்கு மனிதன் உருவாக்கிய ஆயுதமே சாதி மதமாகும். பெண்களை அடுப்படியில் பூட்டி வைக்காமல் படிப்பையும் சுதந்திரத்தையும் அளியுங்கள். அவர்களது ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் மதிப்பளியுங்கள்.  

                                    - இளமதி

Post a Comment

2 Comments

  1. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல, ஆண்களை விட உயர்ந்தவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மறுக்கப்படாத உண்மை.

      Delete