ஒவ்வொரு நாள் இறுதியிலும் அவர்கள் அந்தக் குப்பை தொட்டியில் உள்ள குப்பையை வந்து முனிவரிடம் காட்ட வேண்டும் என்பது உத்தரவு. அந்நாளின் இறுதியில் அனைத்து சீடர்களும் முனிவர் கூறியது போல குப்பை தொட்டியை கையில் ஏந்தியவாறு வந்து நின்றனர். அப்பொழுது அந்த முனிவர் தன்னுடைய குப்பை தொட்டியை மற்றவரிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு கூறினார். பின் முனிவர் ஒவ்வொரு குப்பைத் தொட்டியிலும் ஒரு கடுகை போட்டார். இப்பொழுது அனைவரும் அந்த கடுகை தேடி எடுக்குமாறு கூறினார். அனைவரும் தேடிக்கொண்டே இருந்தனர் ஆனால் கடுகை தேடி எடுக்க முடியவில்லை. தான் கையில் வைத்திருக்கும் கூடையில் உள்ள குப்பையின் அளவு தன்னுடைய கூடையில் இருந்த குப்பைகளை விட அதிகமாக உள்ளது, தன்னுடைய கூடையாக இருந்திருந்தால் கடுகை எளிதில் எடுத்திருப்பேன் என சீடர்கள் அனைவரும் நிணைத்துக் கொண்டனர்.
இதேபோல் மறுநாளும் தொடரும் என்று முனிவர் கூறினார். எப்படியும் நம்முடைய கூடை மற்றவர் இடத்தில்தான் இருக்கப்போகிறது. ஆகையால் இம்முறை சீடர்கள் குப்பைகளை அதிகமாக சேகரித்தனர். சென்ற முறை குப்பைகளை அதிகமாக கொடுத்து அவன் என்னை வஞ்சித்தான். இம்முறை நான் அவனை வஞ்சிக்கிறேன் என சீடர்கள் ஒருவருக்கு ஒருவர் ஏமாற்ற நினைத்தனர். அந்நாளின் இறுதியில் அனைவரும் முனிவரின் முன் தங்களது குப்பைத்தொட்டியோடு போய் நின்றனர். இம்முறை முனிவர் தங்கள் குப்பை தொட்டிகளை தாங்களே வைத்திருக்குமாறு உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு கூடையிலும் கடுகை போட்டார். இம்முறை சீடர்கள் அந்த கடுகை எடுக்க மிகவும் சிரமப்பட்டனர். இறுதியில் யாராலும் எடுக்க இயலவில்லை. இதேபோல் மறுநாளும் தொடரும் என முனிவர் கூறினார். அதிலிருந்து சீடர்கள் குப்பைகளின அளவை குறைக்கத் தொடங்கினர். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன இறுதியில் ஒரு நாள் சீடர்கள் அனைவரும் தங்கள் கூடையோடு முனிவர் முன் நின்றனர். ஒரு கூடையில் கூட குப்பை எதுவும் இல்லை. இப்பொழுது அந்தக் கூடையில் சிறு தூசி விழுந்தாலும் கூட எளிதில் எடுத்து விட முடியும். இதை கண்ட முனிவர் மனம் நெகிழ்ந்து, முகம் மலர்ந்து நீங்கள் பாடத்தை கற்றுக் கொண்டீர்கள் என்று சீடர்களிடம் கூறினார்.
- தென்கச்சி கோ. சாமிநாதன்.
இதேபோல் நாமும் நம் மனதில் பல குப்பைகளை மலை போல் அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். மனதில் எழும் சிறு மகிழ்ச்சி கூட அந்த குப்பைக்குள் சிக்கிக் கொண்டு வெளிவர முடியாமல் தவிக்கிறது.
நம்முடைய குப்பைகளை நாம் அகற்ற வேண்டும். அதற்கு முதலில் குப்பைகளை கிளறி அதில் நல்ல குப்பைகளை பிரித்தெடுக்க வேண்டும். பயனற்றது என குப்பையில் எரிந்தது கூட பயனுள்ளதாய் தோன்றும். குப்பைகளை அகற்ற நினைப்போர் நம் ஆர்வத்தை தூண்டும் வேறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் அவ்வாறு செய்யாமல் குப்பைகளை ஒருங்கே ஒரு மூட்டையாக கட்டி நம்மிடம் வருபவர்களின் மீது கொட்டக்கூடாது. வருபவர்கள் எவ்வளவு குப்பைகளை வைத்திருப்பார் என தெரியாது. நம்முடைய குப்பைகளை தினித்தபின் மேலும் அந்த குப்பை மலையை விட பெரிதாகி மிகப் பெரிய பாரத்தை கொடுக்கும்.
குப்பைகள் அதிகரித்த தொடங்கினால் கவலையும் பயமும் அதிகமாகும். அப்போது நம்முடைய சூழலை பற்றி சிறு துளியும் கூட அறியாத பிறரை அழைத்து அவரிடம் நம் குப்பைகளை கொட்டுவது என்பது அவசியமற்ற செயலாகும். மேலும் அந்த குப்பைகளை அகற்ற அவரிடமே பதில் கேட்பது ஒரு முட்டாள் தனமாகும். நம்முடைய வாழ்க்கையில் உள்ள சூழலை நன்கு அறிந்தவர் நாம் மட்டுமே அதனால் அந்த சூழலை புரிந்து அந்த குப்பைகளை அகற்ற நாமே முன்வர வேண்டும். அந்தக் குப்பைகளை அகற்ற பிறர் வருவார் என காத்திருந்தால் குப்பையின் அளவு தான் பெருகும் ,அது என்றும் குறையாது. ஒருவேளை யாரேனும் வந்தால் அந்த குப்பையில் தீ மூட்டி விட்டு செல்வர்.
குப்பை தேவையான ஒன்று , அளவு அதிகமானால் முதலில் அகற்றப்பட வேண்டிய ஒன்று.
2 Comments
அருமையான பதிவு
ReplyDeleteநன்றி நண்பா
Delete