நான் நிரந்தரமானவன் அழிவதில்லைஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
திரைப்படங்களில் பாடல்களின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும். நாம் ஏற்கனவே பார்த்து ரசித்த ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்த்தால் ஒருவித சலிப்புத் தன்மை ஏற்படும், ஆனால் பாடல்கள் பலமுறை கேட்டாலும் அவ்வாறு ஏற்படுவதில்லை. ஒரு திரைப்படத்தின் முழுக் கதையையே ஒரு பாடல் மூலம் தெரிவிக்க முடியும். பாடல்களின் மூலம் சமூக கருத்துக்களையும் வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களையும் சேர்த்தே பாடல்களை இயற்றியுள்ளனர். இம்மாதிரியான பாடல்களை இயற்றுவதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் கவிஞர் கண்ணதாசன்.
அவர் இயற்றிய பாடல்கள் இரு பாடல்களை இங்கு பகிர்ந்துள்ளேன்.
ஒரு எளிய மனிதன் தன் வாழ்வில் நிகழும் துன்பங்களால் மன வேதனைகளுக்கு உள்ளாகி இன்பத்திலும் துன்பத்திலும் வாடும் ஒருவருக்கு கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் கூறும் அறிவுரை.
படத்தின் பெயர் : சுமைதாங்கி (1962)
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா ?
மேற்கண்ட வரிகளில் கவிஞர் நம் வாழ்க்கை இவ்வாறு உள்ளதா என கேள்வி எழுப்புகிறார்?வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
அவ்வாறெனில் துன்பங்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பதிலை இவ்வரிகளில் விளக்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
இரவும் பகலும் காவியம் பாடி
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நினைத்து பார்த்து நிம்மதி நாடு
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி
சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு

2 Comments
வாழ்க்கைக்கு தேவையான பாடல் வரிகள்.
ReplyDeleteநம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் அவரது பாடல்களில் உள்ளது
ReplyDelete