அவனுடைய சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் காண்பதால் அல்லது சமூக வலைதளங்களில் பதிவிடுதல் போன்ற செயல்களால் நாம் அவரின் மேல் கொண்ட பற்றையும் மரியாதையையும் வெளிப்படுத்துவது போல் ஒரு பிம்பத்தை சமூதாயத்தில் வெளிப்படுத்துகிறோம்.
தனித்தனியே ஒவ்வொரிடமும் தகவலை தெரிவிக்காமல் ஒரே நேரத்தில் அனைவரும் காணும் வகையில் தகவலை தெரிவிப்பதற்கு சமூகவலைதளம் இன்றியமையாத வகையில் உதவுகிறது.
ஒரு செய்தியை சில வரிகள் கொண்ட எழுத்துக்களாலோ அல்லது ஒரு புகைப்படத்தாலோ வெளிப்படுத்தலாம்.ஒரு இரங்கல் செய்தி அதிகபட்சம் இவற்றுள் அடங்கும்.
ஒரு இரங்கல் செய்தியை கேட்டபின் அவரின் அரிய புகைப்படத்தையோ அல்லது அவருடன் தான் சேர்ந்து இருந்த புகைப்படைத்யோ தேடிக் கண்டுபிடுத்து அதோடு மட்டுமல்லாது அதற்கு பின்னனி இசையையும் சேர்த்து அதை வலைதளத்தில் பதிவிடுவர்.
இரங்கல் செய்தியைக் கேட்டு மனம் தாளாது துக்கத்தில் தள்ளப்படும் இவர்களால் எப்படி நிதானமாக ஒரு காணொளி காட்சியை தயார் செய்ய முடிகிறது.
மேலும் தாங்கள் அச்சடிக்கும் கட்அவுட்களில் அடித்தவர்களின் பெயர்களையும் சேர்த்து அச்சடிக்கிறார்கள், எதற்காக ?. பேரிடர் காலத்தில் அரசு வழங்கிய பொருட்களில் கட்சியின் சின்னங்களையோ அல்லது தலைவர்களின் புகைப்படங்களையோ கண்டவுடன் எரிச்சலும் ஆத்திரமும் அடைந்தவர்கள், அவர்களே அவ்வேளையை செய்கையில் சரி என்றாகிவிடுமா! .இல்லை எனில் அவர்கள் அவ்வாறு செய்தது நோக்கம் - " எங்கள் கடமை முடிந்தது நாங்கள் நல்லவர்கள் " என்று சமூகத்திற்கு உணர்த்துகிறீர்களா! .
உருவச் சிலையை நிருவினாலும் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அதற்கு மாலை அணிவித்து தங்களது வருத்தத்தை தெரிவிப்பர். அதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவர்.
இவையனைத்தும் அந்த நபர் இருந்ததன் அடையாளம் மட்டுமே. இறந்தபின்னும் சிலர் வாழ்வது என்பது அவருடைய பூதஉடல் அழிந்தாலும் அவருடைய நற்புண்களும் நல்லெண்ணங்களும் என்றும் அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து நாம் தொடங்க வேண்டும்.அவர் கூறிய நற்செயல்களை நாம் பின் பற்றுவதாலும் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.
தற்கொலையும் கொலையும் எந்த மதத்திலும் ஏற்பதில்லை. அவ்வாறு மீறினால் அவர்களுடைய வம்சம் அதன் கர்மவினைகளை ஏற்றுக்கொள்ளும்.
இவ்வுலகில் பிறப்பெடுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இறப்பு என்பதுண்டு. அவற்றின் வாழ்வில் எதுவுமே நிலையானது அல்ல மரணத்தை தவிர. ஆகவே மரணத்தை கண்டு அஞ்சாதீர். வாழும் வரையில் மற்றவரிடத்தில் அன்பு செலுத்துங்கள். நாம் பிறந்ததின் நோக்கத்தை அறியுங்கள்.

4 Comments
Nice
ReplyDeleteநன்றி
Deleteமாய வாழ்வின் முடிவே மரனத்தின் வாசல்
ReplyDeleteசரியாக கூறினீர்கள்
Delete