Advertisement

Responsive Advertisement

வெறுமை


Emptiness




கசாப்பு கடைகளில் நிற்கும் ஆடுகள் போல நாம் நின்றுக் கொண்டிருக்கிறோம்.
கண்டிப்பாக நாம் வெட்டப்படுவோம் என்பது தெரியும்.
வயது முதிர்ந்து வாழ்க்கையில் சலிப்படைந்துவிட்டு,காமம் அடங்கி,நோக்கமற்று,உறுப்பு தொங்கிப்போய்,பிரக்ஞை இழந்து இருக்கும் தருவாயில் சாவது என்பது இயல்பு.
அப்போது இருக்கும் மனநிலையில் ஆடே முன்னால் வந்து தன் தலையை காட்டி வெட்ட சொல்வது போல் தான் இருக்கும்.
அமியூஸ்மெண்ட் பார்க்கை சுத்தி பார்த்து விளையாடிவிட்டு இங்கு எதும் பெரிதாக இல்லை சரி போவோமா என்று சலிப்புடன் வெளியே வரும் மனநிலை தான் அப்போது முதிர்ந்த வயதில் இருக்கும்.
ஆனால் இப்போதோ..இந்த கொரோனா மிக பெரிய இருத்தலியல் சிக்கலை கொண்டு வந்துவிட்டது.
எதிர்காலம் என்பது மறைந்து போய்விட்டது.
கண் முன்னே ஒரே சூன்யமாக இருக்கிறது.கடவுளின் மேல் நம்பிக்கை இருக்குமா இன்னும் ?எதற்காக சொர்கத்துக்கு செல்வதற்கா ? சரி கடவுளை நம்பி பார்ப்போமா ?
அடுத்தவனின் மேல் இப்போவாது காதல் கொள்வோமா ? அட அதே வெறுப்பு தான் இருக்கிறது இன்னும்.
இரவுக்கும் பகலுக்கும் எதும் வித்தியாசம் தெரிகிறதா ?
எதற்கு தூங்க வேண்டும் ? தூங்கி எழுந்து என்ன செய்ய இருக்கிறது?
எதிர்காலமே மறைந்த பிறகு எதை நோக்கி வாழ்க்கையை நகர்த்துவது?
போட்டு வைத்த திட்டத்தை கிழித்துப்போட்டு விட்டாயிற்று.
எதன் மேலும் நம்பிக்கை அற்ற தன்மையே இருக்கிறது.
சாவு முன்பெல்லாம் சொல்லி கொண்டு வராது.
இப்போது தகவல் கொடுத்து நம்மை தயாராக இருக்க சொல்கிறது. உடல் அழுகிய வாசனை வருகிறது.
சாவு சலித்துவிட்டது.பழகிவிட்டது.
வெறுமை ஒரே வெறுமை.
                                  - அப்துல் ரகுமான்

Post a Comment

2 Comments

  1. என்ன ஒரு அருமையான கதை

    ReplyDelete