துணிக்கடையில் நிற்கும் பொம்மையாக இருந்திருந்தால் தினமும் அணிந்திருப்பேன் ஒரு புத்தாடை ! என்று தனுக்குள் பேசுகிறான்.
அந்த பொம்மை அவனது சட்டையில் உள்ள தழும்பு போன்றுள்ள ஒட்டுகளை பார்த்து ஏளனம் செய்தது.
இந்த சட்டையிலுள்ள ஒட்டுகளே இவன் யார் என்று கூறுகின்றது.
அவன் அணிந்திருக்கும் காலணிகளைக் கண்டு அதிலுள்ள பொத்தல்களைப் பார்த்து "இதற்கு இவன் வெறும் காலிலே போகலாம்" என்றது.இவன் கோவிலுக்கு சென்றால் காலணிக்கு குறி அடையாளம் (டோக்கன்) கூட வாங்க தேவையில்லை. இதையெல்லாம் யாரும் திருடக் கூட எண்ணமாட்டார்கள். அவனது மூக்குகண்ணாடியின் காது ஒரு பக்கம் உடைந்திருந்ததால் அதை கம்பியால் கட்டி அதை சரிசெய்து மாட்டியிருந்தான்.அதைப் பார்த்து இவன் இதை எப்படி சிறு தயக்கம் கூட இல்லாமல் அணிந்திருக்கிறான் என்று ஆச்சரியமடைந்தது.
இவ்வாறெல்லாம் அந்த பொம்மை தன்னைப் பார்த்து ஏளனம் செய்வதாய் எண்ணுகிறான்.அவனுடைய அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவன் அவனுடைய சட்டை பையிலிருந்து தொலைப்பேசியை எடுத்து சமூக வலைத்தளங்களில் பார்வையிடுகிறான்.அதைக் கண்டவுடன் அவன் பெருமூச்சு விடுகிறான்.மேலும் அவன் அந்த சிறுவனின் தொலைப்பேசியை பார்த்தபடியே இருக்கிறான்.
அந்த சிறுவன் தான் ஒரு புதிய கைகடிகாரம் வாங்கியுள்ளதாக சமூக வளைதளத்தில் கடிகாரத்தின் புகைப்படத்தோடு பதிவிடுகிறான்.
கைகடிகாரம் வாங்குவதெல்லாம் தனக்கு கனவில் மட்டும் தான் நிகழும் என நினைத்து மனம் வாடினான்.அந்த சிறுவன் மற்றவர்களின் பதிவுகளையும் பார்க்க தொடங்கினான்.
சமூக வலைதளத்தில் நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருப்பது சக மனிதர்களின் வாழ்க்கைத் தருணங்களே. ஒருவர் வீடு வாங்கியிருக்கிறார். இன்னொருவர் புதிய காருடன் படம் போடுகிறார். போட்டியில் வென்றிருக்கிறார். விருது பெற்றிருக்கிறார். குடும்பத்தோடு வெளிநாட்டுக் கடற்கரையில் எடுத்த புகைப்படம். வெற்றி பெற்ற திரைப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டி. பணி உயர்வு. குழந்தைகள் போட்டிகளில் வென்ற செய்திகள். பண்டிகைப் பரிசுகள். குடும்பக் கொண்டாட்டங்கள். காதலியுடன் பொன்னான தருணம், அழகிய தோழியர் புடைசூழ செல்ஃபி, திருமண போட்டோ ஷூட்டுகள் என பெரும்பாலும் களியாட்டுகள்.
மேற்கண்டவற்றையே அனேக மக்கள் செய்கின்றனர்.அதைத் தான் அந்த சிறுவனும் பார்த்துக் கொண்டு வருகிறான். நல்ல வேளை தன்னிடம் தொலைப்பேசி இல்லாததும் நன்மைக்கே என நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான்.
இவ்வாறு மனிதர்கள் தன்னிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சி அடையாமல் தான் நினைத்ததை எண்ணி அதன் ஏக்கத்திலேயே தனது வாழ்நாளில் பாதியை கழிக்கின்றனர்.உடல் மெலிவாய் உள்ளவர்களுக்கு பருமனாக வேண்டும் என்று ஏக்கம். பருமனாய் உள்ளவர்களுக்கு உடல் எடை குறைய வேண்டும் என ஏக்கம். ஏழையாய் இருப்பவருக்கு பணக்காரர் ஆக ஏக்கம்.நீரிழிவு நோய் உள்ளவனுக்கு இனிப்பு பண்டங்களின் மேல் ஏக்கம்.வாலிபர்களுக்கு காதல் மேல் ஏக்கம்.காதலிப்பவர்களுக்கு திருமணத்தின் மேல் ஏக்கம்.தம்பதியருக்கு குழந்தை மேல் ஏக்கம்.இவை அனைத்தையும் தாண்டி மனிதனுக்கு நிம்மதியின் மீது ஏக்கம். நிம்மதி அடைவதற்கு ஆசையும் ஏக்கமுமே மிகப்பெரிய தடைக்கற்கள் அதை ஒழித்தாலொழிய மனிதனுக்கு நிம்மதி கிடைக்கும்.

4 Comments
நாம் கானும் கனவு இன்னொருவரின் வாழ்க்கையாக இருக்கிறது.
ReplyDeleteஉண்மை தான் நண்பரே
DeleteLast para superbb
ReplyDeleteநன்றி
Delete