Advertisement

Responsive Advertisement

அவளும் நானும்

ஓர் ஊரில் பவிஷ் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் அதே ஊரில் உள்ள பள்ளியில் உயர்கல்வியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். அவனை அந்த பள்ளியில் அனைவருக்குமே தெரியும். அவன் செய்யும் அனைத்திலும் எளிமையும் புதுமையும் இருக்கும். இதனாலேயே அவனை அனைவருக்கும் தெரியவந்தது. மேலும் நட்பு  பாராட்டுவதிலும் அன்பு காட்டுவதிலும் வள்ளல் போலவே திகழ்ந்தான், என்றும் வாடாத முகம், பார்த்தாலே மகிழ்ச்சி பொங்கும் அளவிற்கு கண்களில் ஆனந்தம் கலந்த ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். குறும்பில் கெட்டிக்காரன். பேசுவதில் வல்லவன், வஞ்சத்தில் ஏமாளி, முட்டாளுக்கு சொந்தக்காரன், அறிவாளிக்கு நண்பன்.

ஒரு நாள் அந்த பள்ளியில் மாணவர் குழு ஒன்று நிறுவப்பட்டது. அந்தக் குழு மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் இடையே உள்ள பந்தத்தை பலப்படுத்தவும் மேலும் அவர்களுக்கு இடையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும் தொடங்கப்பட்டது . அந்தக் குழுவிற்கு மாணவர்களின் சார்பாக ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. மாணவர்களின் தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைக்க முடிவு செய்து அதற்காக 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களை தலைவர் பொறுப்பை ஏற்க போட்டியிட செய்தனர். ஆகவே இரு வகுப்பிலும் யார் போட்டியிடுவது என கலந்துரையாடி கொண்டிருந்தனர். இம்மாதிரியான பொறுப்புகள் நிறைந்த ஒரு  பதவியை என்றுமே நற்பண்புகளும் மற்றும் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மட்டுமே போட்டியிட துணிவார்கள்.

இறுதியில் இரு வகுப்பிலும் சேர்த்து நான்கு பேர் போட்டியிட தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். தேர்தல் பிரச்சாரம் செய்வது போலவே இவர்களும் செய்யத் தொடங்கினார்.
இதில் யாருடன் பவிஷ் இருக்கிறானோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் பவிஷை அழைத்து தனியாக போட்டியிடுமாறு கூறினார்கள். முதலில் மறுப்பு தெரிவித்த அவன், இறுதியில் அனைவரின் வற்புறுத்தலால் போட்டியிட தயாரானான்.

அவனுடன் போட்டியிடும் அனைவருமே வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள்.
இவனோ நடுத்தர மதிப்பெண்கள் பெறுபவன். போட்டிகளிலும் கூட ஆறுதல் பரிசு மட்டுமே பெறக் கூடியவன்.  ஆனால் மற்றவர்களோ மேடையேறி பரிசு பெறக்கூடியவர்கள்.

Group Of Children



இறுதியில் தேர்தல் நாளும் வந்தது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்தனர். வாக்குப்பதிவு செய்த அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளைச் சொல்லத் தயாராகினர் பள்ளி நிர்வாகம்.

பவிஷ் அந்த வாக்கு எண்ணிக்கையில் தோல்வியுற்றதாக தகவல்கள் வெளிவந்தன. இதனைக் கேட்டதும் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் அவனுக்கு வாக்களித்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அப்பொழுது பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் யார் வெற்றி பெற்று இருப்பார் என்று கேட்டனர். அனைவருமே ஒன்றுகூடி பவிஷ்  என்று கூச்சலிட்டனர். ஆனால் அவன்  தோல்வியுற்றதாக பள்ளி நிர்வாகம் கூறியது. மேலும் இவன் தோல்வியுற்றது யாருக்கு ஏமாற்றம் என்று கேட்டனர். அதற்கு ஒரு பத்தாம் வகுப்பு மாணவி தனக்கு ஏமாற்றம் என்று கூறினாள். மேலும் அவள் பவிஷிற்கு தான் வாக்கு அளித்ததாகவும் கூறினாள். பள்ளி நிர்வாகம் எதனால்  வாக்களித்தாய் என்று கேட்டது. அதற்கு அவள் பவிஷ் என்றால் உண்மை என்று கூறினாள். இதனைக் கேட்ட அவனது என்றும் வாடா முகம் வாடியது, கண்களில் கண்ணீர் தேங்கி நின்ற வண்ணம் இருந்தது.
                   வாக்கு எண்ணிக்கையில் உண்மையிலேயே வெற்றி பெற்றது பவிஷ் தான். வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனே பள்ளி நிர்வாகம் அவனை அழைத்து, நீ வாக்கு சேகரிக்கும் போது ஒவ்வொரு வகுப்பிலும் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று எதற்காக கூறினாய் என்றனர். தனக்கு பதவியின் மீது ஆசையும் இல்லை பதவியில் அமர தைரியமும் இல்லை என்றான் பவிஷ். ஆனால்  நீதான் வெற்றி பெற்றுள்ளாய் இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்  என்றனர் பள்ளி நிர்வாகிகள். முதலில் இதை நம்பாத அவன் தனக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை பற்றிக் கேட்டான். மற்ற போட்டியாளர்களின் வாக்குகளை சேர்த்தால் கூட நீ பெற்ற வாக்குகளை நெருங்க முடியாது என்றது பள்ளி நிர்வாகம்.
              ஒரு பக்கம் ஆனந்தம் இருக்க மறுபக்கம் பயத்தில் என்ன செய்வதென்று அறியாமல் குழப்பத்தில் இருந்தான். பின் அவர்களிடம் மற்ற போட்டியாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவரையே பதவியில் அமர்த்துமாறு கூறினான். எதற்கும் சற்று சிந்தித்துப்பார் என்றனர் பள்ளி நிர்வாகிகள். என்னுடைய இந்த முடிவே இறுதியானது என்றான் பவிஷ். இவை அனைத்தையும் கண்ணீர் ததும்ப  அனைவரின் முன்னிலையிலும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
              அவன் கூறியவாறு வேறு ஒரு போட்டியாளருக்கு பதவி வழங்கப்பட்டது. இவன் தனக்காக அனைவரின் முன்னிலையிலும் குரல் கொடுத்த அந்த பத்தாம் வகுப்பு மாணவியை பற்றி விசாரிக்கத் தொடங்கினான். அவளிடமே சென்று அவன் வினவிய போது தன்னுடைய தோழி மலர்விழி  தான் அவ்வாறு பேச வைத்ததாக அவள் கூறினாள். இதனைக் கேட்டதும் அவன் எதுவும் பேசாமல் நகர்ந்து சென்றான்.

           பின் அவன் மற்ற பெண்களை விட மலர்விழியை சற்று அதிகமாகவே பார்க்க ஆரம்பித்தான். அவளும் அவனை பார்வையிலே ஈர்க்கும் அளவிற்கு பார்க்க தொடங்கினாள். இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டனர். ஆனால் இருவரும் தங்களது காதலை ஒருவருக்கொருவர்  பரிமாறவில்லை. மலர்விழியை காதலிப்பதாக தன்னுடைய நண்பர்களிடம் கூறினான் பவிஷ். அவன் தன் நண்பர்களுடன் இருக்கும் பொழுது அவர்களை மலர்விழி கடந்து செல்லும் போதெல்லாம் அவனுடைய நண்பர்கள் பவிஷ், பவிஷ் என்று கூச்சலிட தொடங்கினர். மலர்விழி பவிஷை பார்த்து சிரித்துக் கொண்டே நகர்ந்து சென்றாள். 
           
She And I


       
 காதலர் தினத்தன்று தனது காதலை வெளிப்படுத்தியா௧ வேண்டும் என்ற எண்ணத்தோடு கையில் பூக்களை ஏந்தி  மலர்விழியை நோக்கிச் சென்றான். அவன் வருவதை பார்த்த மலர்விழி அவன் அருகில் வந்ததும் அவனிடம், உங்கள் சித்தியின் பெயர் பூங்கொடியா? என்றாள். அதற்கு ஆமாம்! ஏன் கேட்கிறாய்? என்றான். அவர்களது வீட்டின் அருகில் தான் நானும் வசிக்கிறேன். நேற்று அவர்களோடு பேசுகையில் உங்களைப்பற்றி அவர்கள் கூறினார்கள் என்றாள். ஒருவேளை தன் காதலை ஏற்க மறுத்தால் அவள் சித்தியிடம் கூறி விடுவாளோ? என்ற பயத்தில் தன் காதலை அவளிடம் சொல்லாமல் போனான். பள்ளியில் அவளை காண முடியாமல் போனாலும் கூட, தன் சித்தி வீட்டுக்கு செல்வதுபோல அவளது வீட்டை சுற்றி வந்தான். அவளும் அவனை காண வேண்டுமென்றால் அவனது சித்தி வீட்டின் வழியே வந்து செல்வாள்.

இவ்வாறே ஒரு வருடம் கழிந்தது. பன்னிரண்டாம் வகுப்பு வந்தவுடன் படிப்பில் கவனத்தை செலுத்தி நல்லபடியாக தேர்வுகளை எழுதி பள்ளியிலிருந்து கல்லூரிக்கு தேர்ச்சி பெற்றான் பவிஷ். அவளும் அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றாள். பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் இறுதியாய் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கின்றனர். அப்பொழுதும் கூட தங்களது காதலை பரிமாறிக் கொள்ளவே இல்லை.

இவர்களுக்கு இடையே உள்ளது காதல் தானா? அல்லது ஒரு வகை ஈர்ப்பா!. அவ்வாறு காதல் எனில் இவர்கள் ஒன்று சேர்வார்களா? மாட்டார்களா? அவ்வாறு ஒன்று சேர்ந்து விட்டால் முதலில் காதலை வெளிப்படுத்துவது யார்? இவை அனைத்துமே இல்லை எனில் ஒருவரை ஒருவர் கவரும் வகையில் பார்த்துக் கொண்டதற்கு காரணம் என்ன? 

இதன் தொடர்ச்சி தெரிய வேண்டுமா? அப்பொழுது உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள். மேலும் என்னுடைய அடுத்த பதிவு வரும் வரை காத்திருங்கள்.

Post a Comment

2 Comments