மகிழ்ச்சி என்பது நம் மனதில் எழும் ஒருவகை உணர்வு. அது அறிவுடனும் சம்பந்தப்பட்டது. ஒருவன் தான் நினைத்தது கிடைத்தாலோ அல்லது நடந்தாலோ மகிழ்ச்சி அடைகிறான். அவ்வாறு நிகழவில்லை என்றால் சோகத்தில் வாடுகிறான். நம்முடைய எண்ணங்களும் செயல்களுமே மகிழ்ச்சிக்குக் காரணம்.
நாம் எவ்வாறு ஒரு நிகழ்வை எதிர்கொள்கிறோம் என்பதிலேயே மகிழ்ச்சி அடங்கியுள்ளது. மகிழ்ச்சி ஒரு கூட்டத்துடன் இருக்கும்போதோ அல்லது மனதிற்கு பிடித்தவர்கள் உடன் இருக்கும்போதே மடைதிறந்த வெள்ளம்போல் ஓடிக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு வயதிலும் மகிழ்ச்சி மாறுபடுகிறது. சிறுவயதில் பெற்றோர்களை பார்த்தால் மகிழ்ச்சி. பள்ளிப்பருவத்தில் விடுமுறை வந்தால் மகிழ்ச்சி. கல்லூரி பருவத்தில் நண்பர்களோடு உலவுவதும், காதலை தேடுவதிலும் மகிழ்ச்சி. வாழ்க்கையில் அனைவரும் தனது படிப்பு முடியும் வரை மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்து வருவர். படிப்பிற்கு பின் வேலைக்குச் செல்லும் போது பலருக்கு மகிழ்ச்சி குறைகிறது. சிலருக்கு மட்டுமே நிலைக்கிறது.
அனைவரும் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிக்க எண்ணுகிறார்கள் சிலர் தன்னுடைய மகிழ்ச்சிக்காக ஓடிக்கொண்டு இருக்கின்றனர். சிலர் தன் குடும்பத்திற்காக, சிலர் பொது சேவைக்காக.
மகிழ்ச்சி என்பது நிலையற்றவை. மகிழ்ச்சியும் துக்கமும் ஒருவரை வேறு கோணத்தில் மாற்றுகின்றன. எந்த ஒரு நிலையிலும் மனம் தளராது இருப்பவரே சிறப்பாக இருப்பர். அவ்வாறு இருப்பதற்கு மன அமைதி மிக முக்கியம்.

3 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteமகிழ்ச்சி,,,,
Deleteமிக்க மகிழ்ச்சி
Delete