ஒவ்வொருவரும் அவர்களுடைய தேவைக்காக மட்டுமே மற்றவர்களிடம் பழகுகிறார்கள், தேவை முடிந்த பின் அவர்களை கண்டு கொள்ளவே மாட்டார்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அனைவருமே நட்புடன் பழக மாட்டார்கள். சிலர் தன்னால் முடியாத காரியங்களை அவ்வப்போது செய்து முடிக்க ஒருவருடன் நட்பு கொண்டு அவருடைய சுயநலத்திற்காக மட்டுமே அவரை பயன்படுத்துவர் . ஒருவர் செய்யக்கூடிய உதவிகளும் கூட சுயநலமாக மாறிவிட்டது. அலுவலகத்தில் ஒன்றாய் சேர்ந்து பணிபுரியும் வரையில்தன் தொலைபேசி எண்கள் கூட வைத்திருப்பார்கள். அலுவலகம் மாறி வேறு எங்காவது சென்றபின் அந்த தொலைபேசி எண்களைக் கூட அழித்து விடுவர்.
சுயநலம் என்று தொடங்கி விட்டால் நமது நண்பர்களிடமிருந்து, நமது தாய் வரை சுயநலமானது எங்கும் பரவிக்கிடக்கும் ஒன்றாகும். நீங்கள் யோசித்துப் பாருங்கள் ஒரு பசுவானது தான் ஈன்ற கன்றிற்கே ஒரு குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே பால் கொடுக்கும். ஐந்தறிவு உள்ள பசுவிற்ககே சுயநலம் என்ற குணம் இருக்கும் பொழுது ஆறறிவுள்ள மனிதனுக்கு இருப்பது ஒரு எளிதான ஒன்றுதான். நீங்கள் காலையில் எழுந்தவுடன் இரவு தூங்கும் வரை அந்த நாளில் உங்களுக்காக வாழ்ந்துள்ளீர்களா அல்லது பிறருக்காக வாழ்ந்துள்ளீர்களா என யோசித்துப் பார்த்தாலே உங்களுக்குள் எவ்வளவு சுயநலம் இருக்கிறது என்பதை அளந்து விடலாம்.
நாம் எண்ணுகின்ற எண்ணங்களும் நமது ஆசைகளுமே சுயநலம் அதிகளவு பெருக்கத்திற்கு ஒரு தொடக்கமாக இருக்கிறது. தேவைக்கு அதிகமான பணமும் தேவைக்கு அதிகமான பொருளும் நமக்கு அதிக சுகத்தை ஊட்டுவதற்காக நாம் சுயநலத்தை அதிகளவில் பயன்படுத்தினால் நமக்கு என்றாவது ஒருநாள் தீங்கு நடக்க நேரிடும். நாம் நம் குடும்ப சுகத்திற்காக பாடுபடலாம் ஆனால் என்றும் நமது குடும்ப தலைமுறை சுகத்திற்காக பாடுபடக்கூடாது அது பிற்காலத்தில் பிறரது நலத்தை பாதிக்கும் வகையில் அமைந்து விடும். சுயநலத்தை என்றும் பிறர் நலம் பாதிக்கப்படாமல் அனைவரும் பார்த்துக்கொண்டாலே சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது...

2 Comments
சுயநலமில்லா இடத்தில் ஆட்சி தேவையில்லை, தலைவன் தேவையில்லை. ஆரம்பமும் முடிவும் அனைவருக்கும் ஒன்றே.
ReplyDeleteபொதுநலம் எப்போது சுயநலமாக மறுகிறதோ அப்போதே அனைத்தும் மாறும்
Delete