ஆசை அற்றவன் ஞானி ஆகிறான். ஆசை உள்ளவன் மனிதன் ஆகிறான். மனிதர்க்கு ஆசை என்றுமே ஓயாது, அடங்காது அவனை நிம்மதியாக வாழ விடாது.
ஒருவன் தன் வாழ்க்கையில் முதன் முதலில் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்குகிறான். அவனது ஆசை முடிந்தது என என்னுகிறான். ஆனால் அவன் தன்னுடைய மோட்டார் சைக்கிளைவிட சிற்றுந்து (Car) வேகமாக செல்வதைப் பார்த்து அவனது ஆசை சிற்றுந்தை நோக்கி நகர்கிறது. அவன் ஆசைப்பட்டு விரும்பி வாங்கியதாகவே இருந்தாலும் அவனது பார்வை சிற்றுந்தை நோக்கி திரும்பியது. இவ்வாறு அவன் இருப்பதை வைத்து அனுபவிப்பதை விட்டு சிற்றுந்தை நினைத்து ஏங்கினான். நம் மனதிற்கு பிடித்தது எதுவாக இருந்தாலும், பொருளாகவே இருந்தாலும் ,அதன் மீதும் அன்பு செலுத்தும் குணம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் அந்த அன்பு ஆசையினால் பிரியுமானால் யாரும் ஆசையை அழிப்பதில்லை, அதற்கு பதிலாக அன்பை தியாகம் செய்கின்றனர். அனைவரும் ஆசையையே துரத்தி பிடிக்க தயாராகுகிறார்கள் அன்பை தக்க வைத்துக் கொள்ள எந்த யோசனையும் செய்வதில்லை.
நாம் நம் வாழ்க்கையில் அனைவரும் நிம்மதியான வாழ்க்கைக்காகவே ஓடுகிறோம். அதற்குப் ஆசை ஒரு தடையாக இருந்து வருகிறது. சிலர் தன்னிடம் இருக்கும் இருக்கும் ஆசையை அகற்ற முன்வராமல் ஆசை படலாம் ,ஆனால் பேராசை படக் கூடாது என்று தனக்குத் தானே வியாக்கியானம் பேசிக்கொண்டு இருப்பர்.

2 Comments
ஆசைகள் அற்ற உலகம் நிலையான கற்களை போன்றவை அவ்வாறு இருந்தால் மட்டுமே உலகம் நிலையான ஒரு தேடலை பிடிக்கும்
ReplyDeleteஉங்களது கருத்துகளில் ஒரு வித தெளிவு இருக்கிறது
Delete