அவர் சொன்னபடியே இவன் கடவுளுக்கு பூஜை செய்கின்றபோது, கடவுளுக்கு படைக்கப்பட்ட உணவை எலி எடுத்துச் சென்றது.அதைக் கண்டவுடன் கடவுளின் உணவையே எடுத்துச் செல்கிறதே அப்படியென்றால் இது தான் கடவுள்! என்று எலியை வழிபட்டு வந்தான்.
மற்றொரு நாள் எலிக்கு பூஜை செய்கின்றபோது பூனை வந்தது அதைப் பார்த்து எலி பயந்து ஓடியது.எலி பகவானையே பயப்பட வைத்த இந்த பூனை தான் கடவுள் என்று பூனையை வழிபட்டு வந்தான்.
பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் இவரது வீட்டிற்கு தன் நாயோடு வந்தார். அந்த நாயைப் பார்த்து பூனை பயந்து ஓடியது. எனவே பயந்தவன் கடவுளாக இருக்க முடியாது என்று எண்ணினான் . அன்றிலிருந்து நாயை வழிபட தொடங்கினான்.
ஒரு நாள் அந்த நாய் வீட்டிற்குள் வந்ததால் அதை அவரது மனைவி எட்டி உதைத்து வெளியேற்றினாள்.அதைக் கண்டதும் கடவுளையே உதைப்பதால் தன் மனைவி தான் கடவுள் என்று முடிவு செய்து வழிபட்டு வந்தான்.
அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையே வந்த சண்டையில் தன் மனைவியை அடித்தான். கடவுளையே அடிப்பவன் நிச்சயம் கடவுளாகத்தான் இருப்பான் என்று முடிவு செய்து தன்னை தானே பூஜிக்க தொடங்கினான்.
வாழ்க்கையில் தேடல் என்பது அனைவருக்குமே இருக்கும், இருக்க வேண்டிய ஒன்று.அந்த தேடல் உருவானதற்கு கரணம் கேள்வி யாருக்கெல்லாம் கேள்வி பிறக்கிறதோ எல்லோரும் தேட தொடங்குங்கள். இக்கதையில் வந்தவரை போல் அல்லாமல்.

4 Comments
Vera level ji
ReplyDeleteThanks Ji
Deleteஅற்புதமான கதை நண்பா !பகிர்ந்ததற்கு நன்றி.
ReplyDeleteநன்றி நண்பரே
Delete