கவிஞர் கண்ணதாசன் பற்றிய குறிப்பு:
கண்ணதாசன் 24.06.1927 ஆம் ஆண்டில் சாத்தப்பன், விசாலாட்சி என்போருக்கு மகனாய் பிறந்தார்.பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடல்பட்டி என்னும் சிற்றூராகும்.கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.வணங்காமுடி, ஆரோக்கியநாதன் என்ற புனைபெயர்களை உடையவர்.இவர் திரைப்பட பாடலாசிரியர் ஆனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது 1949 ஆம் ஆண்டு இவர் பாடிய கலாங்காதிரு மனமே என்னும் பாடலாகும்.திரையுலகிலும், இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார்.சிறந்த பேச்சாளராகவும், கவியரங்க கவிஞராகவும் புகழ்பெற்று திகழ்ந்தார்.மக்களிடையே மெய்யியலை திரைப்பட பாடல்கள் மூலமாக பாடி கொண்டு சேர்த்தவர் கவிஞர் கண்ணதாசன்.தமிழக அரசின் அரசவை கவிஞராக பணியாற்றியுள்ளார்.சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்ய அகதெமி விருதினை பெற்றார்.
கௌரவம்
சமூகத்தில் எது கௌரவம், எது கௌரவம் இல்லை என்பதை யார் நிர்ணயிப்பது? யாரோ ஒரு சிலர் ஒரு காலத்தில் கௌரவம் என்று கருதியதை நாம் 'சம்பிரதாயம்' என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம். யாரோ சிலர் கௌரவம் இல்லை என்று ஒதுக்கி வைத்ததை நாம் 'சம்பிரதாயத்திற்குப் புறம்பானது' என்று ஒதுக்கி வைத்திருக்கின்றோம்.
கல்வி
படிப்பு என்பது " நெருப்புக் குச்சி " தான். ஆனால் விறகு நல்ல விறகாக இருந்தால் அதிலிருந்து எத்தனை மடங்கு நெருப்பு வருகிறது.
புத்தி
புத்தியிலே மூன்று வகை உண்டு. கர்ப்பூரம்,கரித்துண்டு,வாழை மட்டை என்று. கர்ப்பூரம் காட்டிய உடனேயே பற்றிக் கொள்ளும்; விடிய விடிய நெருப்பைப் போட்டு ஊதினால் தான் கரித்துண்டு பற்றிக் கொள்ளும். வாழை மட்டை என்ன செய்தாலும் பற்றிக் கொள்ளாது.
சத்தியம்
அதைக் காப்பாற்றுவதற்கு எத்தனை உத்தமர்கள் செத்திருக்கிறார்கள் !
அதை அவமானப்படுத்துவதற்கும் எத்தனை பெரிய மனிதர்கள் அவதரித்திருக்கிறார்கள்.
சூதாட்டம்
சூதாடுவது என்று மனிதர்கள் தீர்மானித்து விட்டால், அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராகி விடுகிறார்கள்.
வாழ்க்கை
வாழ்க்கை போய்விட்டது என்றால் அழுது இளைப்பவர்கள் சிலர்; பொருத்துப் பார்க்கலாம் என்று முடிவு கட்டுபவர்கள் சிலர்; எங்கே போய்விட்டது மீண்டும் கொண்டு வருவோம் என்று நினைப்பவர்கள் சிலர்.

4 Comments
Kannadasan is a wonderful poet.
ReplyDeleteஅற்புதக் கவிஞர்
ReplyDeleteThe Legend of poet.
ReplyDeletedefinitely
Delete