ஒரு நாள் தந்தை மகன் இருவரும் பேருந்தில் பயணம் செய்கின்றனர்.அப்போது ஒரு திருநங்கை வந்து கைளை தட்டி அனைவரிடமும் காசு கேட்கிறாள் சிலர் கொடுக்கிறார்கள் சிலர் இல்லை என்கிறார்கள்.சிலர் அவளைக் கண்டு தூங்குவது போல் நடிக்கிறார்கள்.அவள் சங்கடமின்றி அனைவரையும் முறை வைத்தே அழைக்கிறாள்.சிலர் அவளை பார்க்காதது போல் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களை இவள் விடுவதாக இல்லை, அவர்களிடம் "ஒருவர் ஏதாவது கேட்டால் இல்லை என்று பதில் அளித்தாலும் பரவாயில்லை ஆனால் அவர்களை மதிக்காமல் பதில் கூறாமல் இருப்பது தவறு " என்று கண்டிக்கிறாள். சிலர் தன்னிடம் சில்லரை இல்லாததால் அவளிடம் சில்லரை மாற்றிக்கொண்டு அவளிடமே பணம் கொடுத்தனர்.இவை அனைத்தையும் அந்த சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சிறுவன் தன் தந்தையிடம் " பத்து ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்தால் அவள் திருப்பி அவர்களுக்கு சில்லரை காசுகள் தருகிறாள்" ஏன் என வினவினான். அவள் கொடுக்கும் நாணயத்தை பத்திரமாக செலவு செய்யாமல் வைத்திருந்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று கூறுகிறார்.அப்போது பத்து ரூபாய்க்கும் குறைவாக பணம் தருவோரின் நிலை, அவர்கள் நலமாக இருக்க வேண்டாமோ? என்று சிறுவன் கேட்டான்.அதற்கு தந்தை இந்த கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை என்றார்.பின் அவரும் அவளுக்கு பணம் கொடுத்து அவளிடமிருந்து நாணயத்தை வாங்கி செலவு செய்யாமல் பத்திரமாக வைத்துக்கொள் என்று கூறி மகனிடம் கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து ஒரு நடக்க முடியாத வயதான ஒரு முதியவர் வந்து அனைவரிமும் பிச்சை கேட்கிறார். அவரைப் பார்த்த சிறுவன் தன் தந்தையிடம் ,இவர் அந்த திருநங்கையிடம் வாங்கிய பணத்தை செலவு செய்ததால் இவ்வாறு ஆகி விட்டாரா? என்று கேட்டான். அதற்கு அவர் சிரித்திக்கொண்டே இல்லை என்றார். பின்னர் அந்த முதியவர் அவர்களிடம் வந்ததும் அவனது தந்தை ஒரு பணத்தாளை எடுத்து நீட்டினார். முதியவர் மெல்ல நகர்ந்ததும் சிறுவன் முதியவரை ,"ஐயா! நில்லுங்கள் " என்றான். பின் அவனது தந்தை அவனிடம் பத்திரமாக வைத்துக்கொள் என்று சொல்லிக் கொடுத்த அந்த நாணயத்தை முதியவரிடம் கொடுத்துவிட்டு தன் இருக்கைக்குத் திரும்பினான்.இதைக் கண்ட தந்தை அவனிடம் எதற்காக அந்த நாணயத்தை அவரிடம் கொடுத்தாய் என்றார்.இப்பொழுது எனக்கு அது தேவையில்லை அவருக்குத்தான் தேவை என்றான்.இதைக் கேட்டவுடன் அவனது தலையின் பின் ஒளிவட்டம் தோன்றியது போன்றும், அவனது கண்கள் எதையோ சாதித்தது போன்று மின்னியதாக நினைத்து அவனது தந்தை பெருமகிழ்ச்சி அடைகிறார். உதவி செய்வதற்கும், கற்பதற்கும் வயது என்றைக்கும் ஒரு தடையாக இருந்ததில்லை.

6 Comments
Super inspiration story bro
ReplyDeleteநன்றி நண்பா
DeleteSuper Ji
ReplyDeleteThanks Ji
DeleteThis comment has been removed by the author.
DeleteMohan ji vera level panringa
ReplyDelete