Advertisement

Responsive Advertisement

ஆறாம் விரல்

Smoking




நம் அனைவரின் வாழ்விலும் நமது கைகளில் இருக்கும் விரல்களுடன் இன்னொரு விரலாய் ஒன்று இருக்கும். அது ஒரு எழுதுகோலாக (பேனா) இருக்கலாம் அல்லது வெண்குழல்வத்தி (சிகரெட்) ஆகக்கூட இருக்கலாம்.
             நம்மில் பலரின் வாழ்வில் எழுதுகோல் மிக முக்கியமான ஒன்றாகும்.  தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் இன்னும் முக்கிய குறிப்புகள், நெருக்கமானவர்களின் தொலைப்பேசி எண்கள் போன்றவை தனியாக குறிப்பேட்டில் எழுதி வருகின்றனர். தான் செல்லும் இடமெல்லாம் எழுதுகோல் இன்றி செல்லமாட்டார்கள். இன்னும் சிலர் தன் புகைப்படத்தில் கூட எழுதுகோலுடன் தான் இருப்பர்.
 "கத்தியை விட பேனாவின் முனை கூர்மையானது
       ஒருவனை கத்தியைக் காட்டி மிரட்டி அவனை மாற்ற நினைத்தால் அவன் அந்த நொடியில் தான் மாறியதாய் நடிப்பானே தவிர அந்த மாற்றத்தை கடைபிடிக்க மாட்டான். அவனிடம் ஒரு புத்தகத்தை கொடுத்துப் படி என்றால், அவன் புத்தகத்தில் வரும் கதாபாத்திரமாக தன்னை எண்ணி அந்த கதையோடு ஒன்றி வாழ்ந்து அதிலிருந்து அவன் அடையும் மாற்றம் என்றும் மாறாது.
        ஒரு சிறுவன் ஒழுக்கமுடைய நற்பண்புகள் நிறைந்த மேன்மையான மனிதனாக வளர வேண்டும் என்று நாம் எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவன் அதை ஏற்க விரும்ப மாட்டான். நாம்  அவ்வாறு நடந்து காட்ட வேண்டும் அல்லது அவ்வாறு இருந்தோரின் வரலாற்று புத்தகங்களை படிக்கச் செய்ய வேண்டும். அந்த புத்தகத்தோடு ஒன்றி அதில் வரும் நிகழ்வுகளை கற்பனைச் செய்து தாமும் அவ்வாறு இருக்க வேண்டும் என மாறுதல் அடையத் தொடங்குவான்.ஒரு நாட்டின் அரசியல் ஆட்சியையே கவிழ்கக்கூடிய அளவிற்கு பேனா சக்தி வாய்ந்தது.சில சமயங்களில் சிலரின் தலையெழுத்தை கூட அது நிர்ணயிக்கிறது.

    பலரது வாழ்வில் கட்டை  விரலை விட முக்கியமான விரலாக இருக்கும் இந்த ஆறாம் விரல் - வெண்குழல்வத்தி (சிகரெட்). 
     புண் பட்ட மனதை புகைவிட்டு ஆற்று 

பலரின் கூற்று :
          மனதில் உள்ள கவலைகளை புகையிலை போட்டு ஆற்ற வேண்டும் என்பர்.

உண்மையான கூற்று :
புண் பட்ட மனதை புக விட்டு ஆற்று
            மனதில் ஏற்பட்ட கவலைகளை மறக்க வேறு பிடித்தமான வேலையைச் செய்து போக்க வேண்டும் என்பதாகும்.

உண்மையான கூற்றை அறியாமல் அனைவரும் தவறான கருத்தை ஏற்று அதனையே உண்மை என கருதுகின்றனர். இந்த தவறான கருத்தை பல கடைக்காரர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள பயன்படுத்தி விட்டனர். சில டீக்கடைகள் சிகரெட்டை விற்க முன்வரவில்லை, அதனால் அந்த கடைகளுக்கோ கூட்டம் வரவில்லை. ஆகையால் அவர்களும் தங்கள் கொள்கைகளை மாற்ற வேண்டியிருந்தது.
         இந்த ஆறாம் விரல் தோன்றுவதற்கு ஏற்ற காலம் கல்லூரி காலமே, பருவமடைந்த அனைவருமே தாங்கள் சிறுவர்கள் இல்லை என நிரூபிக்கும் வகையில் இந்த பழக்கத்தைத் தொடங்குவர். சிலர் தனக்குப் பிடித்த கதாநாயகன் திரையில் செய்வதைப் பார்த்து பழகுவர்.இன்னும் சிலர் தான் கவலையில் உள்ள போது சிகரெட் தான் மருந்து என்வர்.புகைப்பிடித்தல் மூலம் மூளையில் டோபமைன் எனும் சுரப்பி (ஹார்மோன்) சுரக்கும், (அது நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது மட்டுமே சுரக்கும் ஹார்மோன்). அந்த சுரப்பியை நாம் போதையின் மூலம் தூண்டி சுரக்க வைக்கலாம். பின் நாளடைவில் அது ஒரு பழக்கமாக மாறிவிடும்.அவ்வாறு மாறிய பின் இந்த ஆறாம் விரலை வெட்டி எறிவது மிகவும் கடினமாகும்.இந்த பழக்கத்தால் வரும் நன்மை ஒன்று மட்டும் தான், சாகும் வரை இளைமையோடு இருக்கலாம் ஏனெனில் இளமையோடு சேர்ந்து நாமும் சென்று விடுவோம்.இதைத் தெரிந்தும் தெரியாமலும் பலர் தங்களது பணத்தைச் செலவு செய்து தங்கள் உயிரையே பொறுமையாக பலி கொடுக்கின்றனர்.
    

Post a Comment

2 Comments

  1. புகை பிடித்தல் நாட்டிற்கும், வீட்டிற்கும், காட்டிற்கும், உனக்கும் கேடு

    ReplyDelete
    Replies
    1. மனிதனை மனிதனே அழிக்க முற்பட்ட போது உருவாக்கப் பட்டது தான் போதை

      Delete