ஒரு தாய் தன் மகனை அடித்து துன்புறுத்தாமல் நல்வழியில் வளர்க்க திட்டமிடுகிறார். ஆனால் ஒரு குழந்தையின் மனநிலையில் நாம் என்ன செய்யக்கூடாது என சொல்கிறோமோ, அதையே செய்கிறது. அதனால் அந்த தாய் புலம்ப ஆரம்பிக்கிறாள். அவ்வாறு புலம்பியே தன் மகனை வளர்க்கிறாள். அவன் அந்தப் புலம்பலின் கொடுமையை உணர்ந்து எதையுமே செய்யாமல் போனான். இவ்வாறு புலம்பிக் கொண்டே இருந்தால் ஒருவர் மீது உள்ள அன்பும் மரியாதையும் கூட இழக்க நேரிடும்.
இதுவே நண்பர்களுக்கு இடையே புலம்பல் ஒரு சகஜமான விஷயம். ஒருவருக்கொருவர் மாறி மாறி புலம்புவதை வழக்கமாக வைத்திருப்பார். ஒருவர் பேசும் போது மற்றவர்கள் கூர்ந்து கவனிப்பது போன்று இருப்பாரானால் அவர் கூறியதை விட பெரியதாக கூற வேண்டும் என்று தன்னை தயார்படுத்திக் கொண்டு இருப்பர்.
தனக்குப் பிடிக்காத ஒன்றை பிரியத்தின் காரணமாக மற்றவர்கள் செய்தால் அதை மறுக்கக் கூடாது என்பது நாகரீக சம்பிரதாயம் ஆயிற்றே! அதனாலேயே பலர் மற்றவர்களின் புலம்பல்களை வேறுவழியின்றி கேட்பர். ஏதாவது பேசியாக வேண்டும் என்ற நிலை வரும் போது மனிதர்கள் எதையெதையோ பேசுகிறார்கள்.
மகிழ்ச்சியாக இருப்பவரை கூட புலம்பியே சோகத்தில் ஆழ்த்துவது சிலரின் பழக்கம். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது திடீரென்று ஒருவர் அழைத்து தன் வாழ்க்கையின் சோகத்தை அனைத்தையும் கொட்டித் தீர்ப்பர். எதிரில் இருப்பவர் தன் மனம் தடுமாறி எதற்காக வெறுப்பு அடைகிறோம் என்று தெரியாமலேயே வெறுப்பாகி விடுவர்.
சிலர் குடிபோதையில் புலம்ப ஆரம்பித்தால் எதிரில் கேட்க யாராவது இருக்கிறார்களோ, இல்லையோ போதை தெளியும் வரை பேசிக்கொண்டே இருப்பர். இன்னும் சிலர் யாரிடம் புலம்பலாம் என காத்துக் கொண்டிருப்பர் யாராவது கிடைத்தால் அன்றைய பொழுது முடிந்துவிடும். தன் மீது மற்றவர்கள் இறக்கப்பட வேண்டும் என்றே சிலர் காண்பவர்களிடம் புலம்பிக்கொண்டே இருப்பர். சில பணக்காரர்கள் தன்னிடம் மற்றவர்கள் பணம் கேட்பார்களோ? என நினைத்து அடுத்த வேளை உணவுக்கு பஞ்சம் போல புலம்புவர்.
ஒரு தெளிவான முடிவை எடுத்த ஒருவரிடம் அதைப்பற்றி புலம்பி முடித்தபின் அவர் இந்த முடிவு தெளிவற்றது என நினைத்து கைவிட நேரிடும்.
எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் இருக்கும் வரையில் மனதில் நிம்மதி நிலைக்காது. நிம்மதி அடையாத மனது இல்லாத ஒன்றை அல்லது நடக்காத ஒன்றை பற்றி நினைத்து புலம்ப தொடங்கும். முதலில் தனக்குத்தானே புலம்ப தொடங்கும். பிறகு சுற்றியுள்ள அனைவரையும் தன் புலம்பலால் குழப்பத்தில் ஆழ்த்தி அனைவரின் மகிழ்ச்சியையும் கெடுத்துவிடும்.

3 Comments
புலம்பல் வலியை மறைக்கும் ஒரு மருந்து
ReplyDeleteபுலம்புபவர்க்கு மருந்து அப்போது கேட்பவருக்கு ?
DeleteLearn to Play Baccarat with real dealers from all over the world!
ReplyDeleteA live dealer roulette wheel is a variant of live dealer roulette with an 더킹 바카라 identical wheel size as in the real world. When players start betting