Advertisement

Responsive Advertisement

காதல்

Love



காதலைப் பற்றி நிறையபேர் நிறைய எழுதியுள்ளனர்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் இருந்தாலும் காதல் ஒன்று தான்.அது இறுதியில் அலங்கோலமாகவும் முடியலாம் அல்லது மணக்கோலத்திலும் முடியலாம்.மௌனம் ஒரு தேசிய பாஷை. அதிலே காதலர்கள் பேசுகிறார்கள்.
            ஒரு கல்லூரியில் கணினியியல் பேராசிரியர் ஒருவர் பணி புரிந்து வந்தார். அவர் வேதியியல் பேராசிரியை ஒருவருடன் நட்புடன் பழகி வந்தார். கணினியியல் பேராசிரியருக்கு இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் கணிதமேதாவி மற்றொருவர் தமிழ் பேராசிரியர். இவர்கள் அனைவருமே நல்ல நண்பர்கள். ஒரு நாள் கணினியியல் பேராசிரியர் தனது இரண்டு நண்பர்களிடமும் இன்று மதிய வேளைக்கு பிறகே கல்லூரிக்குச் செல்லலாம் என்று கூறுகிறார். அவர்களும் அவ்வாரே செய்யலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால், கணினியியல் பேராசிரியர் வேதியியல் பேராசிரியரை தனியாக சந்திக்க போட்ட திட்டம் தான் இது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இவரும் தான் போட்ட திட்டத்தின் படியே அனைத்தையும் செய்கிறார். அந்த ஆசிரியை கண்டபின் தனது காதலை அவளிடம் வெளிப்படுத்துகிறார். அவளும் அவரது காதலை ஏற்றுக்கொள்கிறார். பின் இருவரும் இந்த காதலைப் பற்றி மற்ற நண்பர்களிடம் கூற வேண்டாம் முடிவு செய்கின்றனர். அவர்களின் முன்னிலையில் என்றுமே இருப்பது போல சிரித்துப் பேசிக்கொண்டு தங்களது காதலை வெளிக் காட்டாதவாறு இருக்கின்றனர். ஆனால் மற்ற இரு நண்பர்கள் இருவருமே அவர்களது மாற்றங்களை அறிய தொடங்குகிறார்கள். 
               ஒரு நாள் கல்லூரி ஆண்டு விழா அனைவரும் ஒன்றுகூடி இருக்கின்றனர். அப்போது கணினியியல் ஆசிரியர் தனது தொலைப்பேசியில் ஒரு செயலியின் மூலம் அவரது காதலியிடம் செய்தி (மெஸேஜில்) உரையாடிக் கொண்டிருக்கிறார். இவர் அந்த செய்தியை அனுப்பிய உடணே அவளது தொலைப்பேசியில் மணி ஓசை கேட்கிறது. அதை அவள் பார்த்து பதிலும் அனுப்புகிறார்.பிறகு இவரது தொலைப்பேசியில் மணி ஒலிக்கிறது. இதே போல் மாற்றி மாற்றி தகவல் பறிமாற்றம் செய்துக் கொண்டிருக்கின்றனர்.இதை மற்ற நண்பர்கள் கவணித்து விட்டனர். 

            இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என உறுதியாய் தெரியாமல் அவர்களிடம் காதலைப் பற்றி பேச கூடாது என மற்ற இரு நண்பர்களும் முடிவெடுக்கின்றனர்.கணக்கு வாத்தியார் தனக்கு நூற்றிற்கு தொன்னூறு (90/100) விழுக்காடு அவர்கள் காதலிக்கிறார்கள் என்று கூறுகிறார். மற்றொருவர் ஆதாரத்தோடு தான் பேச வேண்டும் என்கிறார்.
     இருவரும் ஆளுக்கொருவரிடம் சென்று அவர்களது திருமணத்தைப் பற்றி வினவுகிறார்கள். காதலர்கள் இருவரும் தங்கள் காதல் தெரிந்துவிட்டதோ என நினைத்து பதில் கூற மறுக்கிறார்கள். அதன் பிறகு அவர்களது காதலை வெளிப்படுத்தியே தீர வேண்டும் என வெவ்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். மஞ்சள் காமாலை நோய் வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாய்  தெரிவது போல் இவர்களுக்கு அந்த காதலர்கள் எது செய்தாலும் அதை காதல் பரிமாற்றமாகவே பார்த்தனர். 

    அவர்கள் இருவரில் ஒருவருடைய தொலைப்பேசி கிடைத்தாலும் அதிலுள்ள தகவலை வைத்து நிரூபிக்கலாம் என ஒருவர் கூறுகிறார். அது அநாகரீகம் என மற்றொருவர் மறுக்கிறார். 

ஒரு நாள் மூன்று நண்பர்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அந்த ஆசிரியை அவ்வழியே செல்கிறார். அவளை அவளது காதலன் ஏன் இன்று தாமதம் என மற்ற நண்பர்களின் முன்னிலையில் கேட்கிறார். அவள் வீட்டில் வேலை அதிகமாக இருந்ததால் அதை முடித்துவிட்டு வர தாமதம் ஆகி விட்டது என கூறுகிறாள். நேற்று கல்லூரி விடுமுறை தானே அப்போது செய்திருக்க வேண்டியதுதானே என்கிறான் காதலன். நேற்று மணிக்கணக்கில் காதலர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததால் அவள் எந்த வேலையும் செய்யவில்லை அதை எவ்வாறு கூறுவது என தெரியாமல் மௌனம் ஆனால் காதலி. அந்த மௌனத்தை உடனே புரிந்து கொண்ட காதலன் வேறு எதோவொன்றை பேச தொடங்கினான். இவரது நண்பர்கள் எதுவும் பேசாமல் நிகழ்வதை உற்று கவணித்துக் கொண்டிருந்தனர்.இந்த நிகழ்வு மேலும் அவர்களின் காதலை வெளிப்படுத்தியது.
         அவர்களது காதலை எவ்வாறு நிரூபிக்கலாம் என இரு நண்பர்களும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தீடீறென்று கணிதப்பேராசிரியர் , இவ்வாறு உலவு பார்ப்பது தவறு என்றும் மேலும் இது அவர்களுக்கு இடையில் உள்ள காதல், அவர்கள் மட்டுமே சம்மந்தப்பட்டது. நாம்மால் அவர்களுக்கு இடையூறு வராமல் இருந்தால் போதும் என கூறினார். ஆமாம்,  நீ சொல்வதும் சரி தான் நாம் இவ்வாறு செய்வதால்,  அவர்களால் நேருக்கு நேர் கூட பேச முடியவில்லை.நாம் ஏன் அவர்களின் காதல் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறோம் என கணிதப் பேராசிரியர் தமிழ்ப் பேராசிரியரிடம் கேட்டார். உண்மையை தேடித் துடிக்கும் மனத்தினால் எழும் சந்தேகங்களுக்கு அழுத்தம் அதிகம் அதுவே காரணமாயும் அமையலாம் என்றார் தமிழ்ப் பேராசிரியர்.

               முதலில் சந்தேகம் தோன்றியது தமிழ்ப் பேராசிரியாருக்கே ஆகும். ஏனெனில் அவர் தான் அந்த பேராசிரியை மேல் முதலில் காதல் வயப்பட்டவர். அவர் தன் காதலை கல்லூரி ஆண்டு விழா அன்று அவளிடம் வெளிப்படுத்தலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால் நிகழ்ந்ததே வேறு, அந்த ஆசிரியை கணினியியல் பேராசிரியருடன் காதல் எனும் பந்தத்தால் இணையாமல் இருந்தார் எனில் தனது காதலை வெளிப்படுத்தி விடலாம் என நினைத்துக் கொண்டு இவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டார் தமிழாசிரியர்.மதில் மேல் பூனை போல தவித்தார்.ஒருதலைக் காதலைப் போல சுகமானது வேறு எதுவும் இல்லை. அதே போல் சங்கடமானதும் எதுவும் இல்லை. 
            தமிழ்ப் பேராசிரியரின் ஒருதலைக் காதல் பற்றி கணிதாசிரியருக்கு தெரியவந்தது. இதைப் பற்றி தமிழாசிரியரிடம் அவர் கேட்டார்.நான் எவ்வளவு நாளாக அவளை காதலிக்கிறேன் என எனக்கு தெரியவில்லை, ஆனால் இது காதலாக மாறலாம் என எனக்கு தோன்றியது சில நாட்களுக்கு முன்பே என்றார் தமிழாசிரியர். வேதியல் பேராசிரியை கணினியியல் ஆசிரியருடன் காதலில் ஈடுபடுவதற்கு முன்னால்,  அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஈர்க்கும் வகையில் குலைந்து பேசிக் கொண்டிருந்தனர், அப்பொழுது அவள் மீது கோபமும் அவன் மீது பொறாமையும் தோன்றியது. அதன் காரணத்தைச் சிந்தித்த போது தான் நான் அவள் மீது காதல் வயப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் அவளது காதலன் என்னைவிட அனைத்திலும் சிறந்தவர். அவரை அவள் மணமுடித்தால் அவளது வாழ்க்கை செம்மையாய் இருக்கும். எனவே, என்னுடைய காதல் அவர்களுக்கு ஒரு இடையூறாக இருக்க நான் விரும்பவில்லை. கவலை ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறது நாட்கள் போக போக கவலையின் அடர்த்தி குறையும் பின் அந்த கவலை மறைந்துவிடும். 

      இறுதி வரையில் உன் காதலை அவளிடம் சொல்லாமலேயே இருக்கப் போகிராயா? ஒரு வேலை அவர்கள் பிரிந்தால் உன் காதலை வெளிப்படுத்துவாயா?  என்றார் கணிதாசிரியர்.

        "சுகமான இரகசியமாகயிருந்தால் மட்டுமே சுகம் தரும். 
        மூடிய கைகளுக்குள் முத்துக்கள் இருப்பதாய் உலகம் எண்ணும்.சில நேரங்களில் உடைந்த சிப்பிகளும் இருக்கும்.
        பிரிவுகள் தானே காதலை உணரவைப்பது, வலிமை அடையச்செய்வது."
                      -கவிஞர் கண்ணதாசன்

மேற்கண்ட வரிகளை தமிழாசிரியர் கணிதாசிரியரிடம் கூறினார்.


               

Post a Comment

2 Comments

  1. மனமானது கடலைப் போன்றது அலைகள் இருக்கத்தான் செய்யும் அதில் சில அலைகளாள் மட்டுமே கறைகளை தொட முடியும்.

    ReplyDelete
    Replies
    1. சில அலைகள் கரையை தொட்டால் பேரழிவு ஏற்பட கூடும்.

      Delete