Advertisement

Responsive Advertisement

தனிமை

Loneliness




தனிமை என்றுமே நம்முடன் இருக்கும் ஒரு அழகான நண்பன். அந்த நண்பன் அனைவரின் வாழ்விலும் நீக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டான். அவனால் எதையும் சாதிக்க முடியும், அவனால் நன்மையும் நடக்கும், தீமையும் பிறக்கும்.
                 சிந்தனையாளன் நிர்மலமான மனத்தோடு தனிமையை நாடினால், அற்புதமான கற்பனைகள் பிறக்கும்.
ஆனந்தங்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறவனுக்கு தனிமை கிடைத்தால், அந்த ஆனந்தம் பன்மடங்கு பெருகும்.துன்பப்பட்டவன் தனிமையை நாடினால் சமயங்களில் தற்கொலை எண்ணமே வரும்.

ஒவ்வொருவரும் தனிமையை தன் வாழ்வில் எதோ ஒரு பிரிவின் மூலமாக தான் உணர்கிறார்கள். சிலர்  சுயசிந்தனை உள்ளவர்கள் மட்டுமே எந்த ஒரு நிகழ்வுகளின்றி 
அதை உணர்கிறார்கள்.

கடவுள் செய்த பாவங்களிளெல்லாம் மிகப்பெரிய பாவம், மனிதனுக்கு இதயத்தைக் கொடுத்தது தான். அதனால் தான் ஆசையும் மோகமும் உண்டாகி அதற்காக என்னென்வோ செய்து இறுதியில் தனிமைக்குள் தள்ளப்படுகிறார்கள்.

சில பிரச்சனைகளால் தனிமையை நாடி வருவோர் முதலில் தன்னை சுற்றியுள்ள  அனைத்தையும் தவறாக புரிந்துகொள்ள தொடங்குவர். அவர்கள்
எதையெல்லாம் விரும்பினார்களோ அதையெல்லாம் ஒரு கட்டத்தில் வெறுப்பர்; எதை வெறுப்பார்களோ அதை ஒரு கட்டத்தில் விரும்புவர்.
அதிலும் சிலர் மற்றவர்கள் தன் மீது இரக்கப்பட வேண்டும் என்றே தனிமையில் இருப்பர்.தனிமை ஒரு வித போதை போலவே அதை ருசித்த பின், அதிலிருந்து வெளிவருவது  சற்று கடினமான ஒன்றே.ஏனெனில் தனிமையில் எதைப் பற்றியும் கவலை பட தேவையில்லை, யார் மீதும் அக்கரை காட்ட தேவையில்லை, மற்றவர்களைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை.
 

Post a Comment

5 Comments

  1. Athukkulla mudinjuruchu innum konjo add pannirukkala

    ReplyDelete
    Replies
    1. தனிமையெனும் போதையில் உங்களை அடிமையாக்க மனம் இல்லை

      Delete
  2. தன் அமைதியே தனிமை என்பதாகும். தனிமையே நிரந்தரமான ஒன்றாகும்

    ReplyDelete